நாணயத்தாள்களின் கொரோனா தொற்று: அழிக்க உத்தரவிட்ட சீன அரசு

Published By: Digital Desk 3

19 Feb, 2020 | 05:27 PM
image

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரிலிருந்து கொரோனா என்ற கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவியதால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

பாதிக்கப்பட்ட நபர் தும்மினாலோ, இருமினாலோ வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் மூலம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. இவர்கள் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இதன் காரணமாக 29  நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது.

சீனாவில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமாக உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உலகை அச்சுறுத்திய சார்ஸ் வைரஸை விட மிகவும் கொடியதாக காணப்படுகிறது.

சீனாவிலும் சுமார் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குணமாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவின் ஹூபே மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 136 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது 74 ஆயிரத்து 185 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11 ஆயிரத்து 977 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபரின் நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த நாணயத்தாள்கள் மூலமும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹூபே மாகாணத்தின் மருத்துவமனை, கடைத்தொகுதிகள், பேருந்துகள் போன்றவற்றில் புலங்கிய நாணயத்தாள்களை சுத்தம் செய்ய சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இடங்களில் இருந்து வங்கிக்கு வரும் நாணயத்தாள்களை 14 நாட்கள் அல்ட்ரா வைலட் கதிர்கள் அல்லது அதிக வெப்பத்தில் வைத்து அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11
news-image

17வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்...

2026-05-11 11:13:00
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்: 14 பொலிஸ்...

2026-05-10 14:50:25
news-image

உக்ரைன் மோதல் முடிவுக்கு வருகிறது -...

2026-05-10 13:09:10