மைக்­ரோசொப்ட் நிறு­வ­னத்தின் துணை நிறு­வ­ன­மாக தற்­போது இணைத்­துக்­கொண்­டுள்ள LinkedIn உத்­தி­யோ­க­பூர்வ இணைய மென்­பொருள் வலை­ய­மைப்பின் மூலம் 26 பில்­லியன் டொலர்­க­ளுக்கு மேற்­பட்ட இலா­பத்தை ஈட்­டி­யுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் நிறை­வுற்ற பங்­குப்­ப­ரி­வர்த்­தனை நிலவ­ரங்­க­ளின்­படி குறித்த மென்­பொ­ரு­ளுக்­கான 196 டொலர் பங்­குகள் செலுத்­தப்­பட்­டுள்­ளன. ஆயினும் மொத்த சமூக வலைத்­த­ளங்­களின் பங்­குகள் 270 டொல­ருக்கு மேற்­பட்ட பங்­கு­களில் விற்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

மைக்­ரோசொப்ட் நிறு­வ­னத்தின் முதன்­மை­யான மென்­பொ­ருட்­க­ளாக கரு­தப்­படும் மைக்­ரோசொப்ட் வேட், பவர் பொ யின்ட் போன்­ற­வற்றை போலவே LinkedIn வலை­ய­மைப்பும் 433 மில்­லியன் மக்­களால் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இதன்­மூலம் மைக்­ரோ­சொப்டின் துணை மென்­பொ­ருட்­களை இல­கு­வாக சந்­தையில் விற்­ப­தற்­கான சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இத­ன­டிப்­ப­டையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டை அடையும் போது அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றியம், கனடா மற்றும் பிரேசில் உள்­ளிட்ட நாடு­களில் 150 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட வரு­மா­னத்தை அடை­ய­மு­டியும் என எதிர்­பார்க்­கப்ப­டு­கின்­றது. இத­ன­டிப்­ப­டையில் தகவல் தொழில்­நுட்­பத்தில் புதிய அபி­வி­ருத்தி திட்­டங்கள் ஏற்ப­டு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த வருடத்தில் LinkedIn மென்பொருள் 3 பில்லியன் டொலர்களை வருமானமாகவும் 166 மில்லியன்களை தேறிய வருமானமாகவும் ஈட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.