ரஜினிகாந்த் நடித்த வெளிவரவிருக்கும் கபாலி படம் உப தலைப்புக்களுடன் இத்தாலியில் திரையிடப்படவுள்ளது. 

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம், ரஜினி பட வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகெங்கும் பலரின் எதிர்ப்பார்ப்பைக் ஏற்படுத்தியுள்ள இந்தப் படமானது சீனா, ஹொங்கொங், பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே, சுவீடன், பிரிட்டன், அமெரிக்கா, கனடா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளில் வெளியாகவிருக்கிறது.

இப்போது முதல் முறையாக இத்தாலியில் வெளியாகும் தமிழ்ப் படம் என்ற பெருமையினை கபாலி பெறுகிறது. 

கபாலியின் 35 நொடி ட்ரைலரை சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளனர். நெருப்புடா என்ற கர்ஜனை குரலுடன் தொடங்கிய இந்த ட்ரைலருக்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது. 

இதனை தொடர்ந்து பார்த்த இத்தாலிய சினிமா பிரமுகர் மிஷெல் க்ராஷியோலா என்பவர், பாலிவுட் சினிமா பிரபலங்கள் சிலரிடம் ரஜினி குறித்து விசாரித்து தெரிந்துகொண்டதன் பின், விழாவுக்கு சென்றிருந்த ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷை அணுகியுள்ளார். 

அவரிடம் கபாலியை இத்தாலியில் வெளியிட அனுமதி கோரியுள்ளார். 

கபாலி இங்கு வெளியாகும் அதே நாளில் இத்தாலியிலும் வெளியாகவிருக்கிறமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இத்தாலிய திரைப்பட விழாக்களிலும் கபாலி திரைப்படம் கலந்து கொள்ள வாய்ப்புக்களும் கிடைத்துள்ளது.