முன்னாள் அமைச் சர் திலக் மாரப்­பன ஒரு சிறந்த கனவான். அவர் உண்­மையைச் சொன்­ன­தா­லேயே பதவி வில­கு­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்ளார் என முன்னான் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ புகழாரம் சூட்டினார்.

எவன்கார்ட் விவ­காரம் தொடர்­பாக நீதி அமைச்சர், சட்­டமா அதிபர் ஆகியோர் நியா­யப்­ப­டுத்தும் போது வேறென்ன விளக்கம் வேண்­டி­யுள்­ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்­பாக முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ பக் ஷ மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வதுஇ சட் டம் மற்றும் ஒழுங்கு சிறைச்­சா­லைகள் புனர்­வாழ்வு மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தனது அமைச்சுப் பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்ளார்.


முன்னாள் அமைச்சர் நேர்­மை­யா­னவர் எனவே எவன்கார்ட் விடயம் தொடர்­பாக அவர் உண்­மையை வெளி­யிட்டார். அவர் ஒரு கனவான். உண்­மையைச் சொன்­னதால் திலக் மாரப்­ப­னவை அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­வ­தற்கு வற்­பு­றுத்­தப்­பட்­டி­ருக்­கலாம்.


அதே­வேளை நீதி அமைச்சர், சட்ட மா அதிபர் ஆகியோர் எவன்கார்ட் விட­யத்தில் எவ்­வி­த­மான சட்ட விரோத நட­வ­டிக்­கை­களும் இல்­லை­யென தெரி­வித்­துள்­ளனர்.
எனவே இவ்விடயம் தொடர்பில் வேறென்ன கதை தேவைப்படுகிறது.