பிரபல நடிகர் காவிங்க பெரேரா தலங்கமவிலுள்ள வெலே கடை சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை பத்தரமுல்லை - பன்னிப்பிட்டி வீதியில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணியாளரை நடிகர் காவிங்கவின் கார் மோதி விபத்துக்குள்ளாக்கிச் சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 42 வயதுடைய மீகஹதென்ன பகுதியை சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்தை விட்டு கார் வெளியேற முயன்றபோது  ஒரு குழுவினர் நடிகரின் காரை தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள 32 வயதான நடிகரை கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.