உயிர்களை காவுகொள்ளும் கொரோனா ! தடுப்பூசியை கண்டுபிடிக்க பெரும் பிரயத்தனம் ! 

Published By: Vishnu

19 Feb, 2020 | 03:27 PM
image

கொரோனா தொற்றுக்குள்ளான 2000 க்கும் மேற்பட்டோர் தற்போது உலகளாவிய ரீதியில் உயிரிழந்து விட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சீனாவின் பிரதான நிலப் பரப்புகளில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை உற்பத்தி செய்ய 12 தொடக்கம் 18 மாதங்கள் ஆகலாம் என்று உகல சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

சீனாவின் சுகாதார ஆணையகம் நேற்று வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் மாத்திரம் 2,006 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு வெளியே 1000 ‍பேர் பாதிப்பு: 

சீனாவின் பிரதான நிலப் பகுதிக்கு வெளியே 1000 க்கும் மேற்பட்டோர் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் தொகை தொடர்ந்தும் அதிகரித்து செல்கிறது. 

தென் கொரியவின் நோய் கட்டுப்பாட்டு மையங்கள் இன்றைய தினம் 20 கொரோனா தொடர்பான புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதனால் தென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 51 ஆக உயர்வடைந்துள்ளது.

ஹொங்கொங்கில் இரண்டாவது மரணம்: 

70 வயதுடைய மூதாட்டியொருவர் ஹொங்கொங்கின் செமியாட்டோனமாஸில் அமைந்துள்ள சீனாவின் நிதிமையத்தில் தொழில் புரிந்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இது ஹொங்கொங்கில் பதிவான இரண்டாவது கொரோனா உயிரிழப்பு சம்பவமாகும்.

பெப்ரவரி 14 ஆம் திகதி வைரஸ் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் கண்டறியப்பட்ட பின்னர் அவர், பிரின்சஸ் மார்கரெட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஹொங்கொங்கில் தற்போது 62 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதுடன், இருவர் உயிரிழந்தும் உள்ளனர்.

டயமண்ட் பிரின்சஸ் கப்பலிலிருந்து பயணிகள் தரையிறக்கம்:

யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்ட பல வாரங்களுக்குப் பின்னர், டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த பயணிகளுக்கு தரையிறங்குவதற்கு ஜப்பான் அனுமதி.

3700 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் பெப்ரவரி 03 ஆம் திகதி யோகோகாவில் தனிமைப்படுத்தப்பட்ட இக் கப்பலில் 500 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இதனிடையே கப்பலிலிருந்து அமெரிக்க உட்பட ஏனைய நாடுகள் சில தமது நாட்டுப் பிரைஜைகளை கப்பலிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தன.

வெஸ்டர்டாம் கப்பலின் நிலை:

நங்கூரமிடப்படுவத்கு பல நாடுகள் அனுமதி மறுத்தி நிலையில் கம்போடியாவில் நங்கூரமிடப்பட்ட வெஸ்டர்டாம் கப்பலில் பயணித்த சுமார் 781 பயணிகளுக்கு கொரோனா தொற்று தொடர்பான சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் அவர்கள் யாரும் வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என இன்றைய தினம் உறுதிபடுத்தப்பட்டது. இந்த தகவலானது கப்பலில் உள்ள மேலும் 1500 க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளது.

நேர்மறையான சூழ்நிலை:

சீன அரச ஊடகங்கள் கொரோனா வைரைஸ் நெருக்கடியின் மோசமான சூந்நிலை முடிவடைந்து விட்டது என்ற செய்தியை முன்வைத்துள்ளது.

நேற்றைய தினம் இங்கிலாந்து பிரதமருடனான தொலைபேசி உரையாடல் ஒன்றில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் இருப்பதாக கூறியுள்ளார்.

சீனாவின் மாநில செய்தி நிறுவனமான 'Xinhua' இந்த தொற்றுநோய் முக்கிய தருணத்தை எட்டியுள்ளதாகவும் கூறியுள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பூசி: 

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை உற்பத்தி செய்த 12 தொடக்கம் 18 மாதங்கள் ஆகலாம் என்று உகல சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்றறு இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

எனினும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பொது சுகாதார தீர்வுகளை ஊக்குவிப்பது இப்போது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

Photo credit : CNN

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17