இந்தியா, சென்னைத் துறைமுகத்திற்கு சீனாவிலிருந்து வந்த கப்பலில், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சீனாவுக்கு பயணத்தையுடன் சீனாவின் உற்பத்திகளையும் உலக நாடுகள் தடை செய்துள்ளன.
இந்நிலையில் சென்னை துறைமுகத்துக்கு வந்த சீனக் கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13 ஆம் திகதி சென்னைத் துறைமுகத்திற்கு வந்த சீனக் கப்பலில் விளையாட்டு பொம்மைகள் நிறைந்த கொள்கலனை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தியபோது, அதில் விலங்குகளை பாதுகாப்பாக கொண்டுவரும் கூண்டுக்குள் பூனை ஒன்று அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த பூனைக்கு கொரோனோ வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், சோதனைக்காக சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
தற்போது குறித்த பூனை இந்தியாவின் வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் கொரோனோ வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூனையை அனுப்பியவர் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், பூனைக்கு கொரோனோ வைரஸ் பரிசோதனை முடிந்ததும் பூனையை மீண்டும் அதே கொள்களனில் வைத்து கப்பலை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM