ஈராக்கில் சுமார் 70 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நியண்டர்டாலின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

RT

குறித்த எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்ற இடங்களைப் பார்க்கும் போது பண்டைய மனிதர்கள் அடக்கம் செய்தல், சடங்குகள் செய்வதற்கு போதுமான அதிநவீன அறிவுடையவர்களாக இருந்துள்ளார்களா? என்பது பற்றிய விவாதத்திற்கு தம்மை இட்டுச் செல்வதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 இந்நிலையில் ஈராக்கின் குறித்த சனிதர் குகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எழும்புக் கூடுகள் போன்று 1950 மற்றும் 1960களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது 10 நியண்டர்டால் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

Extraordinary Neanderthal skeleton found at famous burial site could finally answer ancient DEATH-RITES question

குறித்த எலும்புக்கூடு இரண்டு தசாப்தங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நியண்டர்டால் எலும்புக்கூடு ஆகும். இந்த எலும்புகள் அவற்றின் அசல் நிலைகளிலிருந்து இன்னும் மாற்றமடையாத ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்போதைய அதிநவீன நுட்பங்களைப் பயன்படுத்தி இழந்த மனித இனங்களின் "சவக்கிடங்கு நடைமுறைகளை" விசாரிக்க குறித்த எலும்புக்கூடுகள் இணையற்ற வாய்ப்பை வழங்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.