கெப்பெட்டிகஹலந்த பகுதியில் மதுவரித் திணைக்களத்தினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பெருமளவிலான கள்ளு கைப்பற்றப்பட்டுள்ளது.

கெப்பெட்டிகஹலந்த பகுதி மக்கள் வழங்கிய தகவலையடுத்தே மதுவரித் திணைக்களத்தினரால் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சுமார் 45 ஆயிரம் மில்லி லீற்றர் கள்ளு, 6 ஆயிரம் மில்லி மீற்றர் கோடா , எரிவாயு அடுப்பு, எரிபொருள் நிரப்பு பரல்கள் மற்றும் ஏனைய பொருட்களை மதுவரித் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர். 

குறித்த பொருட்களின் பெறுமதி சுமார் 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமானது என மதுவரித் திணைக்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் நீண்டகாலம் கள்ளுத் தவறணையை நடத்தி வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

குறித்த சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.