கொவிட் - 19 என்ற கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அங்கொடை தொற்று நோய் (ஐ.டி.எச்.) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பூரண குணமடைந்த சீனப் பெண் அங்கிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளார்.

இதேவேளை குறித்த பெண்ணை வைத்தியசாலையிலிருந்து இருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று சீனாவுக்கு அனுப்பும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து வந்த 43 வயதான பெண், ஜனவரி 27 ஆம் திகதி கொரோனா வைரஸுக்கு சாதகமான பரிசோதனை செய்து அங்கோடாவில் உள்ள தொற்று நோய்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் இலங்கையை விட்டு சீனாவுக்கு திரும்பவிருந்தபோதே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது.

photo credit : Twitter