Published by R. Kalaichelvan on 2020-02-19 09:56:09
ஓய்வூதியம் பெற்றவர்கள் தனது தேசிய அடையாள அட்டையை புயைிரத நிலையத்தில் காண்பித்து இலவச ரயில் பணணச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

இதன் அங்குரார்பண நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் ஓய்வூதிய திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இச் சேவையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.