(எம்.ஆர்.எம்.வஸீம்)

அமெரிக்காவினால் விசா வழங்கமால் மறுக்கப்பட்டதில் முதலாவதாக நானே பாதிக்கப்பட்டேன். அப்போது இதுதொடர்பாக பேசாதவர்கள் தற்போது சவேந்திர சில்வா விடயத்தில் முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டு அது பற்றி பேசுவது அரசியல் இலாபம் தேடுவதற்காகும் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தற்போதைய இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது அல்ல. அவருக்கு ஏற்பட்டுள்ள நிலையை நானும் எதிர்க்கின்றேன் என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிணை முறி தொடர்பான மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.