பருத்தித்துறை துறைமுகத்துக்கு அருகில் கடற்கரை வீதியை அண்மித்த காணியொன்றில் இன்று செவ்வாய்கிழமை இரு கைக்குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளன. 

காணி உரிமையாளர்கள் காணியை துப்புரவு செய்து கொண்டிருந்த போது கைக்குண்டுகளை அவதானித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். 

குறித்த காணிக்கு நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்ட  பருத்தித்துறை பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் விஷேட அதிரடிப்படையினரை வரழைத்து அவற்றை அகற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.