முஸ்லிம் பெண்களின் புர்கா தொடர்பில் பைஸர் முஸ்தபா கருத்து

Published By: Digital Desk 4

18 Feb, 2020 | 05:09 PM
image

முஸ்லிம் பெண்களின் புர்கா தொடர்பில், சில பேஷ் புக் நிறுவனங்கள் என்மீது மேற்கொண்டு வரும் பொய்ப்பிரசாரங்களை முற்று முழுதாக தான்  நிராகரிப்பதாகவும், இது என்மீது வேண்டுமென்றே சுமத்தப்படும் பழி என்பதால், இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கு யாரும் ஏமாற வேண்டாம்.

என்றும், முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா (பா.உ.) பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி  நிறுவனமொன்றில் (17) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே, பைஸர் முஸ்தபா இவ்வாறு கேட்டுள்ளார். 

அவர் இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, 

சில இணையத்தளங்கள், எனது கலந்துரையாடலில் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்து, அதனைத் திரிவுபடுத்தி, பேஷ்புக் மூலமாக பொய்ப் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.    

என்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. நான் அங்கு கூறாத ஒன்றைத் திரிவுபடுத்தி அவற்றை வைரலாக்கி வருகின்றன. என்மீது சேறு பூசும் விதத்திலேயே இவ்வாறான பொய்ப்பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக நான் அறிகிறேன்.   இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கு யாரும் ஏமாற வேண்டாம் எனக்கேட்டுக் கொள்கின்றேன்.

நமது முஸ்லிம்  கலாசாரம் தமிழ், சிங்களம் மற்றும்  கிறிஸ்தவ கலாச்சாரத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. இதனால்தான்  பலர் நம்மை மாறுபட்ட கண்களால் பார்க்கின்றனர். 

அரசியலை விடவும் முஸ்லிம் சமூகத்தினர் எமது மதம், எமது போதனைகள், எமது கலாசாரம் போன்றவை தொடர்பில் ஏனையோருக்கு தெளிவூட்ட வேண்டும் என நான் எண்ணுகிறேன். நாம் அணியும் ஆடை தொடர்பில் பெரும் பயமொன்று அவர்களுக்குள் இருக்கிறது.  

இப்போது, நம் முஸ்லிம்களில் அநேகர் தொப்பி அணிந்து தாடி வளர்க்கிறார்கள். இது தவறல்ல.  ஆனால், ஒரு சிலருக்கு முஸ்லிம் பெண்கள் தொடர்பில் பிரச்சினை உள்ளது. அவர்களைக் கண்டால், எப்படியோ ஏதாவதொரு சிக்கலை தூக்கி வாரிப்போடுவார்கள். முஸ்லிம் பெண்கள் தலை முடியை மறைப்பார்கள். உடல் மறைய  ஹிஜாப் அணிவார்கள். 

நாம் இவ்வாறு இருக்க, முஸ்லிம் பெண்கள் மாத்திரம் ஏன் இவ்வாறு இருக்கிறார்கள் என சிலர் நினைக்கிறார்கள். இது போன்றவர்களுக்கு கட்டையாக உடை அணிந்து, உடம்பில் எந்தப் பாகத்தைக் காட்டினாலும் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை. எனவே, எவராவது ஒருவருடைய சுதந்திரத்திற்கு  தடையாக இல்லாமல் இருந்தால், அவருடைய கலாசாரத்தைப் பின்பற்றுவதற்குரிய உரிமை அவருக்குண்டு என நான் நினைக்கிறேன்.

முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காக நான் எப்பொழுதும் முன்நிலை வகிப்பவன். அவர்களின் உரிமைகளுக்காகவும் என்றும் குரல் கொடுப்பவன். முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து பாதையில் செல்ல வேண்டாம் என்றோ அல்லது முற்றிலும் அணிய வேண்டாம் என்றோ நான் ஒருபோதும் கூறியதில்லை. 

அப்படிக் கூறவும் மாட்டேன். ஆனால்,  முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக, பிரதான இடங்களில் புர்கா பாவிப்பதைத் தவிர்ந்து நடப்பது நல்லது என நான் நினைக்கிறேன். எமது மதக் கலாசாரத்தைப் பாதுகாப்பது, எமது உரிமையும் கடமையுமாகும் என்பதையும்  நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் பொது மருத்துவமனையின் திடீர் விபத்து...

2026-09-16 15:55:10
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்சரிவு...

2026-09-16 15:40:46
news-image

கட்டுநாயக்கவில் உணவகத்தின் மேல் மாடியிலிருந்து விழுந்து...

2026-09-16 15:43:27
news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு...

2026-09-16 14:56:41
news-image

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-09-16 14:56:09
news-image

யாழ். களப்பில் 9,000 கடல் அட்டைகளுடன்...

2026-09-16 14:55:03
news-image

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உட்பட சட்டவிரோத செயற்பாடுகள்...

2026-09-16 14:52:16
news-image

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாமல்...

2026-09-16 14:14:14
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு...

2026-09-16 13:51:46
news-image

மட்டக்களப்பில் சிவஞானம், சுமந்திரன் உட்பட 4...

2026-09-16 12:46:18
news-image

அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை...

2026-09-16 12:49:25
news-image

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்காத...

2026-09-16 13:12:57