(பா.ருத்ரகுமார்)

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு செயற்பாடுகள் சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றன. அந்தவகையில்  இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்க துருக்கி அரசாங்கம் எந்நேரத்திலும் தயாராக இருக்கின்றது   என  துருக்கியின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மேவ்லூட் சவுஸ்வோக்லி தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுளில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  அந்தவகையில் துருக்கி ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இவ்வருடத்தில் நாட்டிற்கு முக்கிய அம்சமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும்  அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

இலங்கை வந்துள்ள துருக்கி வெளிவிகார அமைச்சர் மேவ்லூட் சவுஸ்வோக்லி  இன்று வெளிவிவகார அமைச்சில்  அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து பேச்சு நடத்தினார்.   இலங்கை மற்றும் துருக்கி நாடுகளுக்கிடையிலான வர்த்தக பரிமாற்றல் மற்றும் பரிந்துணர்வு ஒப்பந்தங்கள கையெழுத்திடும் நிகழ்வும் இடம்பெற்றது.    

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே துருக்கியின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மேவ்லூட் சவுஸ்வோக்லி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.