உலகளாகவிய ரீதியில் சந்தைப்படுத்தப்டும்  ஐ போனின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

sputnik

சீனாவில் தற்போது தீவிரடைந்து காணப்படும் கொரோனா வைரஸின் தாக்கம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்கள் ( i phone ) உற்பத்தியிலும் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

அத்தோடு ஐ போனின் ( i phone ) உற்பத்திக்கு சீனாவின் பங்களிப்பு அதிகளவில் இருந்து வந்தது.

ஆனால் கடந்த சில வாரகாலமாக சீனாவில் ஐ போனின் கிளை அலுவலகங்கள் மூடப்பட்டன. ஆனாலும் நாட்கள் கடந்த நிலையில் அனைத்து நிறுவனங்களும் வெகுவாக திறக்கப்பட்டன.

இவ்வாறு ஆப்பிள் நிறுவனத்தின் கிளைகள் சீனாவில் திறக்கப்பட்டதால் ஐ போன்களின் உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இருந்தும் அதில் பெரிய அளவு வருமானம் வரவில்லையென ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது.

அதேவேளை ஐ போன்களின் உற்பத்திக்கும் , வருமானத்திற்கும் சீனாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமென ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1,873 ஆக உயர்வடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவரிகளின் தொகையும் 73,335 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.