இந்தியாவுடனான முதல் டெஸ்டில் இந்திய அணியின் தலைவர் விராட்கோலியை ஆட்டமிழக்க செய்யும் ஆர்வத்துடன் உள்ளதாக நியுசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

இந்திய நியுசிலாந்து அணிகளிற்கு இடையிலான முதலாவது டெஸ்ட் எதிர்வரும் 21 ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் டிரென்ட் போல்ட் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நோக்கங்களிற்காகவே நான் கிரிக்கெட் விளையாடுகின்றேன் என தெரிவித்துள்ள டிரென்ட்போல்ட் விராட்கோலி போன்றவர்களை ஆட்டமிழக்கசெய்து எனது திறனை பரிசோதிக்க விரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக விராட்கோலியை ஆட்டமிழக்கசெய்வதற்காக பொறுமையற்று காத்திருக்கின்றேன் என தெரிவித்துள்ள டிரென்ட்போல்ட் அவர் எவ்வளவு சிறப்பான வீரர் என்பது அனைவருக்கும் தெரியும், என குறிப்பிட்டுள்ளார்.

டிரென்ட் போல்ட் வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமான வெலிங்டனின் பேசின் ரிசேர்வ் ஆடுகளத்தில் விராட்கோலியை எதிர்கொள்ள தயாராகவுள்ளதாகதெரிவித்துள்ளார்.

இந்திய அணி மிகத்திறமையானது என குறிப்பிட்டுள்ள டிரென்ட்போல்ட் அவர்களே ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில் முதலாவதாக உள்ளனர் அவர்களிற்கு தாங்கள் எப்படி விளையாடவேண்டும்என்பது தெரியும் எனவும் டிரென்ட்போல்ட் குறிப்பிட்டுள்ளார்.

ஏழு டெஸ்ட்களில் டிரென்ட்போல்ட் இந்திய அணியினரின் 25 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.