தாய்லாந்தின், பெங்கொக்கிலுள்ள வணிக வளாகத்தல் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வணிக வளாகத்தில் உள்ள அழகு நிலையமொன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் ஒரு மருத்துவ ஊழியர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர் தப்பியோடி தலைமறைவாகிவிட்டதாக அந் நாட்டு பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கிட்சனா ஃபத்தானாச்சரோன் கூறியுள்ளார்.

தாய்லாந்து நகரமான நக்கோன் ராட்சாசிமாவில் உள்ள வணிக வளாகமொன்றில் 32 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டு சுமார் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

நக்கோன் ராட்சாசிமாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.