பல் முரசு அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட வளர்ந்தவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இரு மடங்கு  அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு முடிவு எச்சரித்துள்ளது.

பல் முரசு அழற்சி  என்பது பற்களை சூழு உள்ள  திசுக்களில் (பிளேக் கட்டமைப்பு) பாக்டீரியா தொற்று ஏற்படுதலாகும். இதேவேளை மூளையில் தமனியின் இரத்த ஓட்டத்தைக் குருதியுறைவு தடுப்பதால் மூலையின் செயற்பாடு பாதிக்கப்பட்டு பக்கவாதம் நிகழ்கிறது.

பல் முரசு அழற்சி இரத்த ஓட்டத்தை பாதிப்பதன் மூலம், இரத்த நாளங்களின் செயல்படுகள் பாதிக்கப்படுகின்றன.  பல் முரசு அழற்சிக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது தாடை எலும்பை ஆதரிக்கும் திசுக்களுக்கு பரவக்கூடும், மேலும் அந்த நிலை தொடரும் போது இதயம் மற்றும் மூளையில் உள்ள இரத்த நாளங்கள் மெதுவாக சேதப்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

உங்கள் பற்களை சரியாக துலக்குவது மற்றும் உங்கள் ஈறுகளில் தொற்று ஏற்படாது பாதுகாப்பதன் மூலம் முரசு அழற்சி நோயைத்தடுக்கவும்  ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும். இதன்மூலம்  இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கவும் முடியும். 

அத்துடன்  ஃவுளூரைட்டு அடங்கிய பற்பசை கொண்டு  ஒரு நாளைக்கு இரண்டு முறை குறைந்தது இரண்டு நிமிடங்கள் பல் துலக்குவதை வழக்கமாக்குவதன் மூலமும் பற்களுக்கு இடையில் மிதவை அல்லது இடைநிலை தூரிகைகள் மூலம் சுத்தம் செய்யவதன் மூலமும் ஈறு நோய் வராத தவிர்க்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.