2030 ஆம் ஆண்டளவில் செவ்வாய்க் கிரகத்தில் முதல் மனிதர்களை குடியமர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆர்ட்டெமிஸ் திட்டத்தை நாசா நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

இதற்கமைய 2024 ஆம் ஆண்டின் சந்திரனுக்கான திட்டமிடப்பட்ட பணியில் அதிக விண்வெளி வீரர்களை பணிக்கமர்த்தப்போவதாக நாசா செவ்வாயன்று அறிவித்துள்ளது.

இப் பணியில் ஈடுபட அதிகமான விண்வெளி வீரர்கள் தேவைப்படுவதால், ஆர்வம் மற்றும் தகுதியானவர்களிடமிருந்து செவ்வாயன்று நாசா நிறுவனம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. 

அத்துடன் தெரிவு செய்யப்படும் விண்வெளி வீரர்களுக்கு  அவர்களின் கல்வி சாதனைகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் டூவிட் பதிவொன்றை நாசாவின் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது நாசா நிறுவனம்.