தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக அனைவரும் அறிந்தவரே நடிகர் ராஜ் கபூர் . இவர் நடிகர் மாத்திரமன்றி  இயக்குனராகவும் சினி உலகில் வலம் வந்துகொண்டிருக்கிறார். 

அத்தோடு நடிகரும் இயக்குனருமான ராஜ் கபூர்,  நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு ஷாரூக் கபூர், ஷமீனா கபூர், ஷானியா கபூர் என் மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேலும் இவரின் மகன் ஷாரூக் கபூர் நேற்று காலை உடல் நலம் சரி இல்லாத காரணத்தினால் உயிரிழந்துள்ளதாக தெரிவந்துள்ளது. தனது அம்மாவுடன் மெக்காவில் இருந்த போது மூச்சி திணறல் ஏற்பட்டு ஷாரூக் கபூர்  மரணம் அடைந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் இயக்குனர் ராஜ் கபூர் அவர்களின் குடும்பத்தினரையும் தமிழ் திரையுலகையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.