போதைப்பொருளுக்கு எதிரான கையெழுத்து வேட்டை!

18 Feb, 2020 | 01:14 PM
image

போதைப்பொருளினால் ஏற்படும் அழிவினை தடுப்போம் இளம் தலைமுறையினை பாதுகாப்போம் என்னும் தலைப்பிலான போதைப்பொருளுக்கு எதிரான கையெழுத்துப்பெறும்போராட்டம் இன்று காலை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

போதைப்பொருளினை இலங்கையில் இருந்து முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியை கோரும் வகையில் 50ஆயிரம் கையெழுத்துக்களை பெறும் போராட்டத்தினை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்,தேசிய மீனவ பெண்கள் சமூகம்,மட்டக்களப்பு மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் என்பன இணைந்து மேற்கொண்டிருந்தன.

எதிர்வரும் மார்ச் எட்டாம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினத்தன்று ஜனாதிபதியிடம் இந்த கையெழுத்துகளை கையளிக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் அன்டனி ஜேசுதாசன்,திட்ட இணைப்பாளர் லவீனா உட்பட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், தேசிய மீனவ பெண்கள் சமூக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் 15மாவட்டங்களில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவ்வாறு கையெழுத்துப்பெறும் மனுவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவிடம் சர்வதேச மகளிர் தினத்தன்று கையளிக்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் அன்டனி ஜேசுதாசன் தெரிவித்தார்.

இருக்கும் சட்டத்தினை பயன்படுத்தி போதைப்பொருளால் ஏற்படும் அழிவுக்கு சிறந்த தீர்வினை வழங்கவேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் மக்களின் ஆலோசனைகளைப்பெற்று புதிய சட்டத்தினை உருவாக்கி போதைப்பொருளில் இருந்து இந்த நாட்டினை பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுநிற்கின்றோம் என்றார்.

இந்த நாட்டில் போதைப்பொருள் பாவனையினால் இளம் சமூதாயம் அழிந்துசெல்வதுடன் குடும்பங்கள் மத்தியிலும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுவருவதாகவும் அவற்றினை தடுக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் இங்கு முன்வைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04