சிம்பு நடிக்கும் மகா படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் வில்லனாக நடித்து வருகிறார்.

இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில், சிம்பு ஹன்சிகா மோத்வானி இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘மகா’. இந்தப்படத்தில் சிம்பு விமானியாக நடிக்கிறார். 

இவருடன் தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். படத்தைப் பற்றி இயக்குனர் ஜமீல் தெரிவிக்கையில்,

“ 30 ஆண்டுகளுக்கு முன் கோவாவில் வாழ்ந்த ஒரு விமானியின் வாழ்கையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த சைக்காலஜிக்கல் திரில்லர் படம் தயாராகிறது, இந்தப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் முற்றிலும் யாரும் எதிர்பாராத வகையிலான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.” என்றார்.

இதனிடையே சில ஆண்டுகளாக வாய்ப்புகளேயில்லாமல் வீட்டில் இருந்த நடிகர் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் உன் காதல் இருந்தால் என்ற திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது. இவர் தற்போது விஜய் அண்டனி நடிக்கும் ‘காக்கி’ என்ற படத்திலும், அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ‘சம்பவம்’ என்ற படத்திலும், லட்சுமிராயுடன் மீண்டும் இணைந்து ‘மிருகா என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.