மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்குமாறு வேண்டுகோள்

Published By: Digital Desk 4

18 Feb, 2020 | 12:24 PM
image

வரட்சியுடனான காலநிலையால் நாளாந்த நீர்மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்து வருவதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், நாளாந்தம் 5 வீத நீர்மின் உற்பத்தியே முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 69 வீதமாகக் காணப்படுவதாக, அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 53 வீதமாகவும், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 63 வீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 54 வீதமாகவும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 79 வீதமாகவும் காணப்படுவதாகவும், சுலக்‌ஷன ஜயவர்தன  குறிப்பிட்டுள்ளார். 

 வரட்சியான வானிலை தொடர்வதால் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு, பாவனையாளர்களைக் கேட்டுள்ளது. 

சில காலங்களில்  மின்சாரத் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு வரை நீர்மின் உற்பத்தியூடாக உற்பத்தி செய்யப்படும். வரட்சியான காலநிலையுடன் இது வீழ்ச்சியடைந்துள்ளதோடு, 2015 இன் பின்னர் புதிதாக எந்த ஒரு மின் உற்பத்தித் திட்டமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், தனியார் துறையினரிடமிருந்து 200 மெகா வோர்ட் மின்சாரம் கொள்வனவு செய்யவும் அமைச்சு முடிவு செய்துள்ளது. 

மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பாவனையாளர்களிடம் கோரப்பட்டுள்ள நிலையில்,  தேவையற்ற மின்குமிழ்களையும் மின்விசிறிகளையும் அணைத்து  வைக்குமாறும் வேண்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06