நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சுமார் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான போலி வைத்தியர்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோரை அடையாளம் கண்டுள்ளதாக அச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.

ஆகவே அவ்வாறான போலி வைத்தியர்களை இனங்கண்டு  சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.