கொரோனா வைரஸுக்கு எச்.ஐ.வி.க்கான சிகிச்சை முறையை பயன்படுத்தி, விரைவில் சோதனைகளை மேற்கொள்ள ஜப்பான் தயாராகி வருவதாக அந் நாட்டு அமைச்சரவையின் தலைமை செயலாளர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.

கொரோன வைரஸை கட்டுப்படுத்துவதற்கான புதிய மருந்துகளை உற்பத்தி செய்ய எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்து தெரிவிக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜப்பானில் தற்போது 500 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் 450 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு தொடர்பான வழக்குகளும் உள்ளடங்கும்.