இலங்கை அர­சாங்­க­மா­னது தனது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தனை உறு­தி­செய்யும் வகையில் ஐக்­கிய அமெ­ரிக்கா அனைத்து முயற்­சி­க­ளையும் எடுக்கும் என்று அமெ­ரிக்க காங்­கிரஸ் உறுப்­பி­னரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்­தி­யங்­களின் வெளி­வி­வ­கார உப­கு­ழுவின் தலை­வ­ரு­மான அமி பேரா தெரி­வித்­துள்ளார். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னு­டனா சந்­திப்­பின்­போதே அவர் இவ்­வாறு கூறி­யி­ருக்­கின்றார்.

அமெ­ரிக்க காங்­கிரஸ் சபை உறுப்­பி­னரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்­தி­யங்­களின் வெளி­வி­வ­கார உப­கு­ழுவின் தலை­வ­ரு­மான அமி பேரா நேற்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இராசம்­பந்­தனை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.

தற்­போ­தைய அர­சியல் நில­வரம் குறித்து குழு­வி­னரை தெளி­வு­ப­டுத்­திய இரா சம்­பந்தன், தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட புதிய அர­சியல் யாப்பு உருவாக்கம் தொடர்­பிலும் தெளி­வு­ப­டுத்­தினார். ஆனால் தற்­போ­தைய அர­சாங்கம் வேறு­வி­த­மான நிலைப்­பாட்­டினை கொண்­டுள்­ள­தா­கவும் பெரும்­பான்மை மக்கள் அதி­கா­ர­ப­ர­வ­லாக்­கத்­திற்கு அங்­கீ­காரம் அளிக்­க­வில்லை எனவும் அத்­த­கைய சந்­தர்ப்­பத்தில் மாற்று வழி­களை யோசிக்க வேண்டும் எனவும் உண்­மைக்கு புறம்­பாக அறிக்­கைகள் வெளி­யி­டு­வ­த­னையும் சுட்­டிக்­காட்­டினார்.

இங்கு தொடர்ந்து கருத்­து­ரைத்த சம்­பந்தன்,

 தொடர்ச்­சி­யாக வந்த அர­சாங்­கங்கள் இந்த  விடயம் தொடர்பில் பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்­ளன. அவை அனைத்தும் பதி­யப்­பட்­ட­வை­யாக உள்­ளன. எனவே இத்­த­கைய நிலையில் சர்­வ­தேச சமூகம் வாக்­கு­று­தி­களை இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்­று­வ­தனை உறுதி செய்ய வேண்டும்.

இந்த வாக்­கு­று­திகள் அனைத்தும் விடு­த­லைப்­பு­லி­களின் காலத்தில் கொடுக்­கப்­பட்­டவை. தற்­போது விடு­த­லைப்­பு­லிகள் தோற்­க­டிக்­கப்­பட்­டு­விட்­டார்கள் என்­கிற கார­ணத்­தினால் வாக்­கு­று­தி­களில் இருந்து இலங்கை அர­சாங்கம் பின்­வாங்க முடி­யாது. வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டாமல் இருக்­க­மு­டி­யாது.

உலகின் பல­வேறு பகு­தி­களில் உள்­ள­வாறு ஒரு அதி­கா­ர­ப­ர­வ­லாக்­கத்தின் மூல­மான அர­சியல் தீர்­வொன்­றினை நாம் எதிர்­பார்க்­கின்றோம்.  இலங்கை எனது நாடு இங்கே சம உரி­மை­யுள்ள பிர­ஜை­யாக நான் மதிக்­கப்­ப­ட­வேண்டும். அண்­மையில் இலங்கை பிர­த­ம­ரு­ட­னான ஊடக சந்­திப்பில் இந்­திய பிரமர் இலங்கை மக்கள் நீதி­யு­டனும் சமத்­து­வத்­து­டனும் அமை­தி­யு­டனும் வாழ்­வ­தற்­கான சூழல் அமைய வேண்டும் என்­ப­தனை வலி­யு­றுத்தி இருந்தார்.

நியா­ய­முள்ள அர­சியல் தீர்­வொன்­றினை அடைய முடி­யாது போனால் அது பாரிய பின்­வி­ளை­வு­களை கொண்­டு­வரும். தமிழ் தலை­வர்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை சிங்­கள  தலை­வர்கள் மதிக்­காதன் விளைவே விடு­த­லைப்­பு­லி­களின் உரு­வாக்­கத்­திற்கு கார­ண­மாகும்.

உண்­மையை கண்­ட­றிந்து நஷ்ட ஈடு வழங்­கு­வதில்  காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வலம் மற்றும் நஷ்ட ஈட்டு அலு­வ­லகம் என்­பன சேர்ந்து இயங்க வேண்டும். அது தற்­போது நிகழ்­வ­தற்­கான சாத்­தி­யங்கள் குறை­வா­கவே உள்­ளன. எம்மால் இய­லு­மான அனைத்­தையும் நாம் செய்து விட்டோம். இனிமேல் இலங்கை அர­சாங்கம் தனது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­னத்தை சர்­வ­த­சேச சமூகம் உறுதி செய்ய வேண்டும்.

சர்­வ­தேச சமூ­கத்தின் குரல் இலங்கை விடயம் தொடர்பில் பல்­வேறு மட்­டங்­களில் கேட்ட வேண்டும். தமிழ் மக்­க­ளிற்­கான ஒரு அர­சியல் தீர்வு எட்­டப்­படும் பணியில் சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்பு அத்­தி­யா­வ­சி­ய­மா­னது என்று எடுத்துக் கூறினார்.

சுமந்­திரன் கருத்து

இதன்­போது கருது தெரி­வித்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் யாழ் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம் ஏ சுமந்­திரன் 2012ஆம் ஆண்டு அமெ­ரிக்க ஐக்­கிய இராஜ்­ஜியம் மனித உரிமை பேர­வையில் முன்­வைத்த பிரே­ர­ணையின் அமு­லாக்­கத்தின் அவ­சியம் குறித்து தெளி­வு­ப­டுத்­தினார்.

நிலை­யான அர­சியல் தீர்வு மற்றும் பொறுப்­புக்­கூறல் ஆகி­ய­வற்­றினை நிலை­நாட்ட வேண்­டு­மெனில் பிரே­ர­ணையில் உள்ள விட­யங்கள் அமு­லாக்­கப்­ப­ட­வேண்டும். இதற்­கப்பால் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் நிலைமை தொடர்பில் உண்­மைகள் கண்­ட­றி­யப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். தம் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­தனை அறிந்­து­கொள்­ளாமல் எந்­த­வொரு நஷ்ட ஈட்­டிற்கும் எம்­மக்கள் அணு­ம­திக்­கப்­போ­வ­தில்லை. அரச படை­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­ட­வர்கள் இருந்­தி­ருப்பின் அவர்கள் எவ்­வாறு இறந்­தார்கள் என்ற உண்மை வெளிக்­கொ­ண­ரப்­ப­ட­வேண்டும்.  

உண்­மையை கண்­ட­றிந்து நஷ்ட ஈடு வழங்­கு­வதில்  காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வலம் மற்றும் நஷ்ட ஈட்டு அலு­வ­லகம் என்­பன சேர்ந்து இயங்க வேண்டும். அது தற்­போது நிகழ்­வ­தற்­கான சாத்­தி­யங்கள் குறை­வா­கவே உள்­ளன. எம்மால் இய­லு­மான அனைத்­தையும் நாம் செய்து விட்டோம். இனிமேல் இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவனத்தை சர்வதசேச சமூகம் உறுதி செய்ய வேண்டும்.

சர்வதேச சமூகத்தின் குரல் இலங்கை விடயம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் கேட்ட வேண்டும். தமிழ் மக்களிற்கான ஒரு அரசியல் தீர்வு எட்டப்படும் பணியில் சர்வதேசத்தின் பங்களிப்பு அத்தியாவசியமானது என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சந்திப்பில்  கருத்து தெரிவித்த குழுத்தலைவர் இலங்கை அரசாங்கமானது தனக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் ஐக்கிய அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என தெரிவித்தார்.