இலங்கை கலைஞர்களின் படைப்பில் உருவான காணொளி பாடலான மையற் கனா பாடல் இளைஞர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த காதலர் தினத்தன்று வெளியான இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், பாடலின் வரிகளும் இளைஞர்களை கவரக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாடல் தொடர்பில் இயக்குனர் தக்ஷன் கிரிஸ் தெரிவிக்கையில்,
"மையற்கனா " இந்த பாடல் எங்களது இரண்டு வருட கால உழைப்பு. சக கலைஞர்கள் திரைப்படத் துறையில் படும் கஷ்டங்கள் அனைத்தையும் நாங்களும் கடந்து வந்தோம்.
இந்த பாடலின் முக்கியமான நோக்கம் திரைத் துறையில் சாதிக்க ஆசை இருந்தும் வாயப்புக்கிடைக்காமல் இருக்கும் கலைஞர்களை வெளியே கொண்டு வருவதுதான் அந்த நோக்கத்தின் ஆரம்பம் நிறைவேறியுள்ளது என நம்புகிறோம்.
இந்த படைப்புக்காக உழைத்த அனைவரும் அவர்களது வேலையை எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி விருப்பத்துடன் சிறப்பாக செய்தனர். அதுவே இந்த பாடலின் பெரும் பங்கு வகிக்கின்றது.
அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். அத்துடன் சில மூத்த கலைஞர்களும் எங்களை சரியாக வழிநடாத்தி சென்றனர் அவர்களுக்கும் எனது சிரம் தாழ்த்திய நன்றிகள்.
முடிந்தவரை பார்வையாளர்கள் திருப்தி படுத்தக்கூடிய சந்தோஷப்படுத்தக்கூடிய பாடலாக மையற் கனா வெளிவரவேண்டும் என்பதே எங்களது ஆசை. அந்த ஆசை ஓரளவுக்கு நிறைவேறியுள்ளது என நம்புகிறேன்.
அத்துடன் எங்களது படைப்பில் எதாவது பிழைகள் இருந்தால் பெரிய மனதுடன் எங்களை மன்னித்து மையற்கனா விற்கு நீங்கள் தந்த அன்பையும் ஆதரவையும் எங்கள் அடுத்த படைப்புகளுக்கும் வழங்கி உங்கள் பிள்ளைகள் நாங்கள் வளர உதவுவீர்கள் என சிரம் தாழ்த்திய பணிவுடனும்,மனம் நிறைந்த அன்புடனும் கேட்டு கொள்கிறோம். மேலும் இந்த வாய்ப்பை கொடுத்த வீரகேசரிக்கும் மையற்கனா அணியினது மனமார்ந்த நன்றிகளை தெரிவிததுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.
அதேவேளை ஆர்வமுல்ல இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும், சரியான தளம் அமைத்துக் கொடுக்கப்படவில்லை.
அத்தோடு எதிர்வரும் காலங்களில் மக்காளல் ஏற்றுக்கொள்ளக் கூடிய , சமூகத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த கூடிய படைப்புகள் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM