இரா­ணு­வத்­த­ள­பதி லெப்­டினன்ட் ஜெனரல் சவேந்­திர சில்­வாவுக்கும், அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கும் எதி­ராக அமெ­ரிக்க அர­சாங்­கத்­தினால் விதிக்­கப்­பட்­டி­ருக்கும் பய­ணத்­த­டையை, வடக்கு - கிழக்கு தமிழ் ­மக்கள் வர­வேற்­ப­தாகக் கூறி­யி­ருக்கும் முன்னாள் வட­மா­காண முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்­ட­ணியின் தலை­வ­ரு­மான சி.வி.விக்­கி­னேஸ்­வரன், பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்­களில் சவேந்­திர சில்வா ஈடு­பட்­டமை  தொடர்பில் நம்­ப­க­மான தக­வல்கள் கிடைத்­ததன் விளை­வாக அவரை அமெ­ரிக்­காவில் வேண்­டப்­ப­டா­தவர் என்று பிர­க­டனம் செய்­த­மைக்­காக அந்­நாட்டு இரா­ஜாங்க செயலர் மைக் பொம்­பி­யோவை தாங்கள் முழு மன­துடன் பாராட்­டு­வ­தா­கவும் கூறி­யி­ருக்­கிறார்.

இரா­ணு­வத்­த­ள­பதி லெப்­டினன்ட் ஜெனரல் சில்­வா­விற்கு எதி­ராகக் கடந்த வாரம் விதிக்­கப்­பட்ட அமெ­ரிக்கத் தடையை எவ்­வாறு பார்க்­கி­றீர்கள் என்று விக்­கி­னேஸ்­வ­ர­னிடம் செய்­தி­யாளர் ஒருவர் கேட்­ட­போது, இலங்கைத் தமிழ் மக்­களின் சார்பில் பேசு­வ­தாகக் கூறிய அவர், 10 வரு­டங்­க­ளுக்கும் அதி­க­மான கால­மாக இலங்­கையில் அடுத்­த­டுத்துப் பத­விக்கு வந்த 3 அர­சாங்­கங்­களின் பிடி­வா­தப்­போக்கைக் கருத்­திற்­கொண்டு பார்க்­கும்­போது இப்­போது சட்­டத்தின் ஆட்சி நிலை­நி­றுத்­தப்­பட வேண்டும். நீதிக்­கான தமிழ் மக்­களின் நேரம் வந்­து­விட்­டது என்று அவர் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அவர் பதிலின் முழு­வி­பரம் வரு­மாறு:

இலங்கை இரா­ணுவத் தள­பதி லெப்­டினன்ட் ஜெனரல் சவேந்­திர சில்­வா­விற்கும், அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கும் எதி­ராக அமெ­ரிக்கா விதித்த பய­ணத்­த­டையை வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் வர­வேற்­கி­றார்கள். சில்வா கட்­டளைப் பொறுப்பின் ஊடாக பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்­களில் சம்­பந்­தப்­பட்­டமை தொடர்பில் கிடைக்­கப்­பெற்ற நம்­ப­க­மான தக­வல்­களின் கார­ண­மாக அவரை அமெ­ரிக்­காவில் வேண்­டத்­த­கா­தவர் என்று பிர­க­டனம் செய்­வ­தற்கு முடி­வெ­டுத்­த­மைக்­காக அமெ­ரிக்க இரா­ஜாங்க செயலர் மைக் பொம்­பி­யோவை முழு மன­துடன் நாம் பாராட்­டு­கிறோம்.

2009 ஆம் ஆண்டு இலங்­கையின் உள்­நாட்­டுப்­போரின் இறு­திக்­கட்­டங்­களில் சட்­ட­வி­ரோ­த­மான கொலை­க­ளுக்கு சில்வா உத்­த­ர­விட்டார் என்ற நம்­ப­க­மான குற்­றச்­சாட்­டுக்­களை பி.பி.சியின் சனல் - 4 ஆவ­ணப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. 'என்­ன­வா­னாலும் செய்­யுங்கள். அது செய்­யப்­ப­டவே வேண்டும். ஆனால் முடித்­துக்­கட்­டப்­பட வேண்டி முறையில் அதை முடித்­து­வி­டுங்கள்' என்று அன்­றைய பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்­ஸ­வி­ட­மி­ருந்து கிடைக்­கப்­பெற்ற கட்­ட­ளை­யொன்றை சில்வா இலங்கை இரா­ணு­வத்தின் 58 ஆவது படைப்­பி­ரிவில் தனக்குக் கீழ் பணி­யாற்­றி­ய­வர்­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்­தி­ய­தற்­கான சான்று சனல் - 4 ஒளி­ப­ரப்­பிய காணொளி அறிக்­கை­களில் உள்­ள­டங்­கி­யி­ருக்­கி­றது. அந்தக் கட்­டளை குடி­மக்­களும், சர­ண­டைந்த போரா­ளி­களும் உட்­பட (அப­கீர்த்தி மிக்க வெள்­ளைக்­கொடி சம்­பவம் உட்­பட) பெரும் எண்­ணிக்­கை­யி­லான தமி­ழர்கள் படு­கொலை செய்­யப்­ப­டு­வ­தற்கு வழி­வ­குத்­த­தாகக் கூறப்­பட்­டது. எனவே அமெ­ரிக்­கா­விற்குள் பிர­வே­சிக்க முடி­யா­த­வாறு சில்வா மீது விதிக்­கப்­பட்ட தடை ஏனைய நாடு­களும் பின்­பற்­று­வ­தற்­கான ஒரு உதா­ர­ண­மாக அமை­கி­றது.

போர்க்­குற்­றங்கள், மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்கள் மற்றும் இனப்­ப­டு­கொ­லை­யாக அமை­யக்­கூ­டிய செயற்­பா­டு­க­ளுக்­காக இலங்கை அதி­கா­ரி­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வதில் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு இருக்கும் கட­மை­யையும், அமெ­ரிக்­காவின் இந்த ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்கை மேலும் உறு­திப்­ப­டுத்­து­கி­றது. அத்­த­கைய குற்­ற­வா­ளிகள் என்று கூறப்­ப­டு­ப­வர்­களை விசா­ரிப்­ப­தற்குக் கலப்பு நீதி­மன்றம் ஒன்றை அமைக்­கு­மாறு பணித்த ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் பல தீர்­மா­னங்­க­ளுக்கு இணங்­க­மு­டி­யாது என்று இலங்கை தொடர்ச்­சி­யாகக் கூறி­வந்­தி­ருக்­கி­றது. அப்­பாவி குடி­மக்­களை வேண்­டு­மென்றே பயங்­க­ர­வா­திகள் என்று கூறிக்­கொண்டு கொலை செய்­வது எந்த வகை­யி­லுமே வீர­சா­க­சத்­துக்கு ஒப்­பா­கி­வி­டாது என்­பதை லெப்­டினன்ட் ஜெனரல் சில்­வாவை ஒரு ஹீரோ­வாகக் காண்­பிக்க முயற்­சிப்­ப­வர்கள் விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

குற்­ற­வியல் பொறுப்புத் தொடர்­பான அத்த்­கைய தெளி­வான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு இலக்­காகும் சகல அதி­கா­ரி­க­ளி­னதும் வழக்­குகள் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­தினால் அல்­லது தகுதி வாய்ந்த எந்­த­வொரு சர்­வ­தேச மன்­றினால் விசா­ரணை செய்­யப்­பட வேண்டும். அத்­த­கைய குற்­றங்கள் தொடர்பில் வழக்குத் தொடுப்­ப­தற்கு சர்­வ­தேச சமூ­கத்­திற்கு இருக்­கக்­கூ­டிய அதிகாரம் (ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தில் உள்ளவாறான) சர்வதேச நியாயாதிக்கக் கோட்பாட்டிலும், ரோம் சட்டத்தில் கைச்சாத்திடாத நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு எதிராக அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட நடைமுறையிலும் குறித்துரைக்கப்பட்டிருக்கிறது.

10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த 3 இலங்கை அரசாங்கங்களின் பிடிவாதத்தைக் கருத்திற்கொண்டு நோக்கும் போது இப்போது சட்டத்தின் ஆட்சி கட்டாயம் நிலைநிறுத்தப்பட வேண்டும். நீதிக்கான தமிழ் மக்களின் தருணம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.