சீன வான்பரப்பில் விமானம் பயணித்துக்கொண்டிருந்தவேளை உயிரிழந்த இந்திய பெண்ணின் உடல் சீன வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை  இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று வாரத்திற்கு முன்னர் தனது 63வயது தாயாருடன் அவுஸ்திரேலியாவிலிருந்து விமானத்தில் வந்துகொண்டிருந்தவேளை தீடிரென தாயாரிற்கு மாரடைப்பு ஏற்பட்டு விமானத்திலேயே அவர் உயிரிழந்தார் என   பல்மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எயர் சீனா விமானத்திலேயே எனது தாயார் உயிரிழந்தார், உடனடியாக விமானம் செங்சூவிமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது  தாயாரின் உடல் அங்குள்ள வைத்தியசாலைக்கு எடு;த்துச்செல்லப்பட்டது எனவும் புனீட் மெஹ்ரா என்ற  பல்மருத்துவர்  தெரிவித்துள்ளார்.

எனினும் ஒரு மாதமாகின்ற நிலையில் இன்னமும் எனது  தாயாரின் உடலை  மீட்கமுடியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் இதன் காரணமாக குடும்பத்தவர்கள் மனமுடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

என்ன பிரச்சினை என்பது எனக்கு தெரியவில்லை இது குறித்து இந்திய பிரதமர்நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என குறிப்பிட்டுள்ள புனீட் மெஹ்ரா ஆனால் இன்னமும் எனது தாயாரின் உடல் கிடைப்பதற்கான அறிகுறியில்லை எப்போது அவரின் உடல் கிடைக்கும் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் தாயரின் உடல் இன்னமும் ஹெனானில் உள்ளதாக தெரிவித்துள்ள இந்திய குடும்பத்தவர்கள் தங்கள் மன உளைச்சல் விரைவில் முடிவிற்கு வரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்தியா இந்த வாரம் விமானத்தில் சீனாவிற்கு நிவாரணப்பொருட்களை அனுப்பவுள்ள நிலையில் இந்த விமானத்தை பயன்படுத்தி  எனது தாயரின் உடலை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என புனீட் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

நான் எனது துயரத்தை இந்திய பிரதமரின் மக்கள் துயரங்களை பதிவு செய்யும் இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ள அவர்  இந்திய பிரதமர் வெளிவிவகார அமைச்சரிற்கும் கடிதங்களை எழுதியுள்ளேன், சீனாவிலுள்ள இந்திய தூதரகத்திற்கும் கடிதங்களை அனுப்பியுள்ளேன் ஆனால் 24 நாட்கள் கடந்துவிட்டன ஆனால் இன்னமும் எங்கள் தாயாரின் உடல்குறித்து எங்களிற்கு எதுவும் தெரியவில்லை எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவரிற்கு இறுதிக்கிரியைகளை செய்ய விரும்புகின்றோம் ஆனால் உடல் கிடைக்கும் வரை அதனை செய்யமுடியாது இதன் காரணமாக இந்த விடயத்தில் உதவுமாறு இந்திய பிரதமரையும் வெளிவிவகார அமைச்சரையும் கேட்டுக்கொள்கின்றேன் எனஉயிரிழந்த பெண்ணின்  கணவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய பெண்ணின் உடலை பெறுவதில் தாமதங்கள் ஏற்படலாம் என  சீனாவிற்கான  இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.

வைரஸ் தாக்கத்தின் பின்னர் சீன அதிகாரிகள் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர், சில நடவடிக்கைகள் மிகவும் கடுமையானவையாக காணப்படுகின்றன என பல் வைத்தியரின் குடும்பத்தினரிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள இந்திய தூதரக அதிகாரிகள் வைரஸ் இன்னமும் குறைவடைகின்றது என்பதற்கான அறிகுறிகள் இல்லை,எனவும் தெரிவித்துள்ளனர்.