அம்பாறை பகுதியில் பக்மித்தியாவ மற்றும் திம்பிரிகொல்ல வனப்பகுதிகளிலுள்ள மரிஜுவானா வகையை சேர்ந்த மூன்று  கஞ்சா தோட்டங்களை தமண பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர். 

தமண பொலிஸார் மூன்று நாட்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா தோட்டம் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 3 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, குறித்த கஞ்சா தோட்டம் தமண பொலிஸாரினால் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கஞ்சா தோட்ட முற்றுகையின் போது தப்பிய ஓடிய சந்தேக நபரையும், இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள சூத்திரதாரியையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.