விளையாட்டுத் துறையை பொருத்தவரை மிக முக்கிய விருதாகக் கருதப்படுவது லாரியஸ் விருதாகும். இந்நிலையில், 2019- ஆம் ஆண்டுக்கான லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது. 

கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை, 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு அதிக வாக்குகள் பெற்று தேர்வானது. அந்தவகையில் இவ்விருதை சச்சின் பெற்றுக் கொண்டார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக்  இவ்விருதை சச்சினிற்கு வழங்கியமையும் குறிப்பிடதக்கது. 

விருது பெற்ற பின் பேசிய சச்சின் கூறியதாவது, “இது மிகவும் சிறப்பு மிக்கது. உலக கோப்பையை வென்ற போது இருந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒட்டு மொத்த நாடும் அந்த தருணத்தை கொண்டாடியது” இதையிட்டு நான் பெருமிதம் கொள்கிறேன் என்றார்.