யாழில் திருட்டு சம்பவம் : சந்தேக நபர்கள் 5 பேருக்கு விளக்கமறியல்!

Published By: R. Kalaichelvan

18 Feb, 2020 | 09:48 AM
image

யாழ்ப்பாணம் அரியாலையில் இரண்டு வீடுகளில் நகைகள் மற்றும் பணம் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்களில் இருவர் ஹெரோயின் போதைப்பொருளை தம் வசம் உடமையில் வைத்திருந்தனர் எனவும் மற்றும் ஒருவர் வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸாரால் தனித்தனியே அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் அரியாலை கனகரட்ணம் வீதியில் உள்ள வீடொன்றிலும் ஏவி வீதியில் உள்ள வீடொன்றிலும் அண்மையில் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை பட்டப்பகலில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றன. தாலிக்கொடி உள்ளிட்ட பெறுமதியான நகைகள் திருடப்பட்டிருந்தன.

அவை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வீடுகளின் உரிமையாளர்களால் முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன. அதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், தடயங்களின் அடிப்படையில் நேற்று முன்தினம் அரியாலையில் உள்ள வீடொன்றில் தேடுதலை முன்னெடுத்தனர்.

அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த 19 பவுண் 6 கிராம் தங்க நகைகளை (158 கிராம் தங்க நகைகள்) கைப்பற்றியிருந்தனர். அங்கு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது.

சுமார் 22 தொடக்கம் 25 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.

அரியாலையில் உள்ள வீடொன்றில் 6 தங்கப் பவுண் தாலிக் கொடி உள்பட 11 பவுண் 2 கிராம் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒரு பி அறிக்கையும் மற்றொரு வீட்டில் 8 பவுண் 4 கிராம் தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் மற்றொரு பி அறிக்கையும் 5 சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டன.

அத்துடன், இரண்டு சந்தேக நபர்களின் உடமையிலிருந்து ஆயிரத்து 900 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டதாக தனித் தனியே இரண்டு பி அறிக்கைகளும் சந்தேக நபர் ஒருவர் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டார் என தனியான ஒரு பி அறிக்கையும் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டன.

பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட 5 பி அறிக்கைகளையும் ஆராய்ந்த நீதிவான்  சந்தேக நபர்கள் ஐவரையும் வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46