பல்லம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பங்கதெனிய - ஆனமடுவ வீதியின் 52 ஆம் கட்டையில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல்லம, பொத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த 73 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டமையால்  குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் , குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்று படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  பல்லம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.