தேயிலை ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டில் கூடுதலான வருமானம் ஈட்டப்பட்டதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் சஞ்சய ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி மூலமாக வருமானம் 240.6 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது.

இது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீத அதிகரிப்பாகும்.