(எம்.எப்.எம்.பஸீர்)

சட்ட மா அதிபர் தரப்பும் பொலிஸ் தரப்பும் வெவ்வேறு தரப்புக்களை போன்று வழக்கில் செயற்படுவதானது  பிரச்சினைகளையே தோற்றுவிக்கும். 

எனவே சட்ட மா அதிபர் தரப்பும் பொலிஸ் தரப்பும் தமக்குள் உள்ள முரண்பாட்டு நிலைமை முதலில் தீர்க்கவிட்டால்  சிக்கல் நிலைமை உருவாகும் என கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க கூறினார்.

மிக் 27 ரக போர் விமாங்கள் நான்கினை கொள்வனவு செய்யும் போதும் அதே ரக விமாங்கள் நான்கினை மீள திருத்தும் போதும் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான விடயம் குறித்த வழக்கு விசாரணைகளின் நிறைவிலேயே அவர் இதனை தெரிவித்தார்.