வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

Published By: Digital Desk 4

17 Feb, 2020 | 09:38 PM
image

(எம்.மனோசித்ரா)

' நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு ' தேசிய கொள்ளைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்படும் வெகுசன ஊடகக் கொள்கையின் படி வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக நாடு முழுவதிலிருந்தும் அனைத்து வெகுசன ஊடகவியலாளர்களின் தகவல்களையும் சேகரிக்க தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 

இதற்காக கடந்த ஆண்டு அல்லது இவ்வாண்டு அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட வெகுசன ஊடகவியலாளர்களிடம் இருந்து மாத்திரம் தகவல்கள் திரட்டப்படவுள்ளன.  

இதற்காக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் www.media.gov.lk இணையதளம் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ள அல்லது அமைச்சுக்கு வருகை தருவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். 

மேற்படி பூர்த்தி செய்த படிவத்தை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன் கிடைக்கும் வகையில் ' பணிப்பாளர் (ஊடகம்), தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, இல.163, ' எதிசிதி மெதுர ' , கிருலப்பனை வீதி, பொல்ஹேன்கொட, கொழும்பு - 05. ' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். 

இது தொடர்பாக 011-2513645 என்ற இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொண்டு தெரிந்து கொள்ள முடியும் என்று அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12