(ஆர்.விதுஷா)

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று இருவேறுப்பட்ட  குழுவினர் தனித்தனியாக கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு  ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபட்டனர்.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்  தொழில்  வாய்ப்பை  இழந்த அதிகாரிகளும், இராணுவ வீரர்களின் உரிமைகளை  பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தினருமே இருவேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

வீடமைப்பு  அபிவிருத்தி  அதிகார சபையின்  தொழில் வாய்ப்பை  இழந்த அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட  எதிர்ப்பு  ஆர்பாட்டத்தில் 50 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் ,   தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன் போது ஜனாதிபதி செயலக வாளாகத்தில்  பொலிஸ்  பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டதுடன்,  ஆர்பாட்டகார்கள்  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்களில்  சிலருக்கு  ஜனாதிபதி செயலகத்தினுள் சென்று  கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான  வாய்ப்பு  ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.    

அங்கவீனமடைந்த  இராணுவ  வீரர்களுக்கு ஓய்வூதியத்திற்கு  பின்னராக  சம்பளத்திற்கு  நிகரான  தொகையை  வழங்குமாறு  கோரியே இராணுவ  வீரர்களினின்  உரிமைகளை  பாதுகாப்பதற்கான  தேசிய இயக்கமும் ஓய்வுபெற்ற  விசேட  தேவையுடைய   இராணுவத்தினர் மற்றும் அவர்களுடைய மனைவிமார்களுடைய  சங்கத்தினரும்  இணைந்து இந்த எதிர்ப்பு  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில்  அங்கவீனமடைந்த  இராணுவ  வீர்கள்  கலந்து  கொண்டதுடன், தேசிய  கொடியை  ஏந்தி தமது எதிர்ப்பை  வெளிப்படுத்தினர். 

இதன்போது அவர்களில்  சிலருக்கு  ஜனாதிபதி  செயலகத்தினுள் சென்று  கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான  வாய்ப்பு  ஏற்படுத்தி கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.