மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான  பட்டதாரிகளுக்கு அரச தொழில்வாய்ப்புக்களை  பெற்றுக்கொடுக்கும்   நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.    

இந்த  எண்ணிக்கையில்  உள்ளடங்கும் வெளிவாரி  பட்டதாரிகள் மாறுப்பட்ட பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். ஆகவே    வெளிவாரி பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் விசேட  கவனம் செலுத்த வேண்டும்  என்று  வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியின்  பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷவிற்கு இன்று கடிதம் ஒன்றினை அனுப்பி  வைத்துள்ளார்.