எதிர்வரும் ஜுலை முதலாம் திகதியிலிருந்து பஸ் கட்டணம் 15 சதவீதமாக அதிகரிக்கப்படாவிட்டால், ஜுலை நான்கு நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட இருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஆகக் குறைவாக இருக்கும் 8 ரூபாய் பஸ் கட்டணத்தை 10 ரூபாயாக அதிகரிக்க வேண்டுமெனவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்தார்.