எம்.சி.சி குறித்து ஆராய்வதற்கான குழுவின் ஆரம்ப அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Published By: Digital Desk 4

17 Feb, 2020 | 09:22 PM
image

மிலேனியம் சவால்கள் திட்டம் (MCC மிலேனியம் செலேன்ஞ் கோப்பரேஷன்) தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஆரம்ப அறிக்கை இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

2019 டிசம்பர் மாதம் 18ஆம் திகதி அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தின்படி ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் லலிதசிறி குணருவன் இக்குழுவின் தலைவராக கடமையாற்றுகின்றார். 

போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி டி.எஸ்.ஜயவீர மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன மற்றும் பட்டய கட்டிடக் கலைஞர் நாலக்க ஜயவீர ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.

சுயாதீன தொழின்மை பகுப்பாய்வு ஒன்று இக்குழுவிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் பல்வேறு துறைகளையும் உள்ளடக்கிய வகையில் விரிவானதொரு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆவணங்களை ஆராய்தல், பல்வேறு தரப்புக்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் மாநாடுகளில் பங்குபற்றி தகவல்களை திரட்டுவதற்கும் இக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் குறித்து முழுமையான அறிக்கை 04 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40