மேற்கத்திய இசையில் தடம் பதிக்கும் மூன்று தமிழர்கள்

17 Feb, 2020 | 05:21 PM
image

தமிழ் இசை உலகில் திரைப்படப்பாடல்களுக்கும்,பக்தி பாடல்களுக்கும் இருக்கும் அதே வரவேற்பு தற்போது, திறமையான இசை கலைஞர்கள் உருவாக்கும் ஆல்பங்களுக்கும் இருக்கிறது. ‘இசைக்கு மொழியில்லை’, ‘கலைக்கு எல்லையில்லை’என்பார்கள்.அதைப்போல் இன்றைய இளைய தலைமுறையினர் உலகளாவிய இசையை தமிழில் கேட்பதை விரும்புகிறார்கள். 

அதிலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மேற்கத்திய இசையை கேட்பதில் மட்டுமல்ல, அத்தகைய இசையிலும் தங்களது முத்திரையையும் பதித்து கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான லைக்குகளை பெற்று ‘திருவிழா’ என்ற ஆல்பம் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அந்த ஆல்பத்தின் இசை அமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமையுடன் வலம் வரும் வினுஷன் விஷ்ணுகுமார் (Vinushan Vishnukumar- FSPROD Vinu) பேசுகையில்,“ FSPROD என்ற இசைக்குழுவின் சார்பில் நானும்,என்னுடைய நண்பர்களான மிதுலன் வாசன் (Mithulan Vasan-FSPROD Mithu) மற்றும் விதுர்ஷன் கணேசராஜா (Vithurshaan Kanesarajah-FSPROD Vithi)ஆகிய மூவரும் இணைந்து இந்த ஆல்பத்தை உருவாக்கினோம்.

எங்களுடைய பெற்றோர்கள் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு புலம் பெயர்ந்தார்கள். நாங்கள் மூவரும் சுவிட்சர்லாந்தில் தான் பிறந்தோம். பதிமூன்று வயதிலிருந்து எங்கள் மூவருக்கும் இசை மீதிருந்த தீரா காதலால் ஒன்றிணைந்தோம். பெரும் முயற்சிக்கு பிறகு 2010 ஆம் ஆண்டில் நாங்கள் மூவரும் இணைந்து ‘FSPROD’என்ற இசைக் குழு ஒன்றினை தொடங்கினோம். முதலில் சுவிஸ் மற்றும் ஜெர்மன் மொழியில் பாடல்கள் எழுதி இசையமைத்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு தமிழில் ஆல்பம் செய்யவேண்டுமென்று விரும்பினோம்.

வித்தியாசமானதாகவும், தரமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக எங்களின் தேடல் தொடங்கியது. கடந்த ஆண்டில் 12 பாடல்கள் அடங்கிய ‘சட்டப்படி’ என்ற ஆல்பத்தையும், அதே ஆண்டில் 15 பாடல்கள் அடங்கிய ‘திருவிழா’ என்ற ஆல்பத்தையும் வெளியிட்டோம். இதற்கு நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பெரும் ஆதரவும், பாராட்டும் கிடைத்தது. இந்த பாடல்களை வீடியோவாகவும் தயாரித்து, இணையத்தில் வெளியிட்டோம். அதற்கும் லட்சக்கணக்கான பார்வைகள் பெற்று எங்களை உற்சாகப்படுத்தியது.

ஒரே ஆண்டில் இரண்டு பெரிய ஆல்பங்களை எங்களுடைய இசைக்குழு மட்டும்தான் வெளியிட்டிருக்கிறது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த ஏராளமான வாய்ப்புகளும் கிடைத்தது. அழைப்பினை ஏற்று இதுவரை ஜெர்மனி, டென்மார்க், கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வெற்றிகரமாக இசை பயணம் மேற்கொண்டோம்.

எங்களது தயாரிப்பில் வெளியான ‘திருவிழா ’என்ற ஆல்பம்,  கடந்த 2019 ஆம் ஆண்டில் ஸ்விட்சர்லாந்தில் அதிகமானவர்கள் பார்வையிட்ட ஆல்பம் என்ற பெருமையும், அதிகளவில் பிரபலமான பாடல் என்ற பாராட்டும், சிறந்த ஆல்பம் என்ற விருதும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. அந்நியத் தேசத்து மண்ணில் பிறந்து வளர்ந்தாலும், இங்குள்ள கலாச்சாரத்தையும், எங்களது ஆதி கலாச்சாரத்தையும் சமமாகவே பாவித்து வருகிறோம். தொடர்ந்து இசைப்பயணம் மேற்கொண்டு, இசையால் இந்த உலகை ஒன்றிணைக்க திட்டமிட்டிருக்கிறோம்.”என்றார்

இதனிடையே ‘FSPROD’ என்ற இவர்களது இசைக்குழுவின் சார்பில் இவர்கள் ஆல்பங்கள் தயாரித்து வெளியிட்டாலும், இசைத் தொடர்பான அனைத்து பணிகளையும் இந்நிறுவனம் சார்பில் மேற்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இயற்றிய பாடல்கள் எல்லாமே பிரபல்யம் தான் .அதில் ஹபீபி (Habibi  ) மற்றும் வத்திக்குச்சி (Vathikuchi ) ஆகிய இரண்டும் பிரபல்யமான பாடல்கள் ஆகும் .இரண்டுமே youtubeil சரித்திர சாதனைகள் படைத்தது .இதில் ஹபீப் 10 மில்லியன் பார்வையாளர்களை கொண்டது .ஸ்விட்சர்லாந்தில் மக்களை அலற விட்ட பாடல்கள் என கூறலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37