கொழும்பிலிருந்து எண்ணெய் ஏற்றிச் சென்ற பார ஊர்தி ஒன்று கினிகத்தேனை நகருக்கு அண்மையில் விபத்துக்குள்ளானதில் கினிகத்தேனை கொழும்பு வீதி ஊடான போக்குவரத்து சுமார் 2 மணித்தியாலங்கள் தடைப்பட்டது.

குறித்த விபத்து இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றதாகப் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த எண்ணெய் பவுசர் வளைவினை கடக்கும் போது பாரம் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாகவும் சமையல் எரிவாயு ஏற்றிச் சென்ற  பார ஊர்தியின் உதவியுடன் குறித்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து தடையைச் சரி செய்ததாகவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.