ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின்  43 ஆவது கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­வ­தற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா மற்றும் அவ­ரது குடும்­பத்­தினர், அமெ­ரிக்­கா­வுக்குள் நுழை­வ­தற்கு தடை­வி­திக்கும் அறி­விப்பை வெளி­யிட்­டி­ருக்­கி­றது அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம்.

இறு­திக்­கட்டப் போரின் போது லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா தலை­மை­யி­லான 58 ஆவது டிவிசன் படை­யினர், நீதிக்குப் புறம்­பான படு­கொ­லைகள், மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­ட­தாக கிடைத்த நம்­ப­க­மான ஆதா­ரங்­களின் அடிப்­ப­டையில் இந்த முடிவை எடுத்­தி­ருப்­ப­தாக அமெ­ரிக்கா கூறி­யி­ருக்­கி­றது.

வெளி­நா­டு­களில் உள்ள அதி­கா­ரிகள் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்­களில் ஈடு­பட்­ட­தற்­கான நம்­ப­க­மான ஆதா­ரங்­களை அமெ­ரிக்க இரா­ஜாங்க செயலர் கொண்­டி­ருந்தால், அந்த நபர்கள் மற்றும் அவர்­களின் குடும்­பத்­தினர் அமெ­ரிக்­கா­வுக்குள் நுழையத் தகு­தி­யற்­ற­வர்கள் என்று, அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின்  வெளி­நாட்­டு­ செ­யற்­பா­டு­க­ளுடன்  தொடர்­பு­டைய 7031 (சி) இலக்க சட்­டத்தில் கூறப்­பட்­டுள்­ளதன் அடிப்­ப­டை­யி­லேயே, இந்தத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக, அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.

ஐ.நா மற்றும் பிற அமைப்­பு­களால் ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்ட லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா மீதான மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுகள்,  தீவி­ர­மா­னவை, நம்­ப­க­மா­னவை என்றும் அதில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.

அமெ­ரிக்­காவின் இந்த அறி­விப்பு இலங்கை அர­சாங்­கத்­துக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் அறி­விப்பு வெளி­யானவுடன், வெளி­வி­வ­கார அமைச்சு வெளி­யிட்­டி­ருந்த அறிக்­கையில்  இருந்தே அதனைப் புரிந்து கொள்ள முடி­கி­றது.

இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்டு ஆறு மாதங்­க­ளுக்குப் பின்னர் இந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை வெளி­வி­வ­கார அமைச்சின் அறிக்­கையில், கூறப்­பட்­டி­ருப்­பதைக் கொண்டே, இவ்­வா­றா­ன­தொரு அறி­விப்பை அதுவும் தற்­போ­தைய தரு­ணத்தில் இலங்கை அர­சாங்கம் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை என்று கருத முடி­கி­றது.

லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா, கடந்த ஆண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால், இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­ட­வு­ட­னேயே அமெ­ரிக்கா அதற்கு எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­தது. கொழும்பில் அமெ­ரிக்க தூத­ர­கமும் வொஷிங்­டனில், அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளமும் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன. அத்­துடன், இந்த நிய­ம­னத்­தினால் இலங்­கை­யு­ட­னான பாது­காப்பு ஒத்­து­ழைப்­பு­களை குறைத்துக் கொள்ள வேண்­டிய நிலை ஏற்­ப­டலாம் என்றும் அமெ­ரிக்கா எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்­தது. அந்த அறி­விப்பை அப்­போ­தைய அர­சாங்கம் கண்­டு­கொள்­ள­வில்லை.  இது புதிய அர­சாங்­கத்­துக்கு ஊக்­க­ம­ளிப்­ப­தா­கவே இருந்­தது.

அதனால் தான், கடந்த டிசம்பர் 31ஆம் திக­தி­யுடன், பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக இருந்த அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­வ­ரத்ன ஓய்­வு­பெற்­றதை அடுத்து, பதில் பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக, லெப்.ஜெனரல் சவேந்­திர சில்­வாவை, நிய­மித்­தி­ருந்தார் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ.

இந்த நிய­ம­னத்தின் மூலம், அவர், ஐ.நா.வுக்கும் ஒரு செய்­தியை வழங்­கி­யி­ருந்தார். ஐ.நா அல்­லது சர்­வ­தேச நெருக்­கு­தல்­க­ளுக்கு அடி­ப­ணியப் போவ­தில்லை என்­பதே அந்த செய்தி. அந்த செய்­தியை அமெ­ரிக்கா புரிந்து கொண்ட பின்­னரே, இலங்­கையின் இரா­ணுவத் தள­பதி மற்றும் குடும்­பத்­தி­ன­ருக்கு தமது நாட்­டுக்குள் நுழை­வ­தற்குத் தடை விதித்­தி­ருக்­கிறது.

இலங்­கை­யுடன் பாது­காப்பு ஒத்­து­ழைப்பு, நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல், பாது­காப்பு மறு­சீ­ர­மைப்பு போன்­ற­வற்­றுக்கு தொடர்ந்து ஒத்­து­ழைப்பு வழங்கத் தயா­ராக இருப்­ப­தாக கூறி­யுள்ள அமெ­ரிக்கா, போர்க்­குற்­றச்­சாட்­டுகள் விட­யத்தில் உறு­தி­யான நிலைப்­பாட்டில் இருப்­ப­தா­கவும் கூறி­யி­ருக்­கி­றது.

இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்டு ஆறு மாதங்­க­ளுக்குப் பின்னர் அமெ­ரிக்­காவின் இந்த அறி­விப்பு,  வந்­தி­ருப்­பதை கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது அர­சாங்கம்.

இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டதும் அமெ­ரிக்கா எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யது. ஆனாலும், அதனை இலங்கை அர­சாங்கம் கருத்தில் கொள்­ளாமல் தான், லெப்.ஜெனரல் சவேந்­திர சில்­வாவை பாது­காப்பு அதி­கா­ரி­களின் பதில் பிர­தா­னி­யாக நிய­மித்­தி­ருந்தார் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ.

அந்த நிய­மனம், இடம்­பெற்று 45 நாட்­க­ளுக்குள் தான் இந்த முடிவை எடுத்­தி­ருக்­கி­றது அமெ­ரிக்கா.

ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் அடுத்த அமர்வு எதிர்­வரும் 24ஆம் திகதி  தொடங்கப் போகி­றது. இந்த அமர்வில் இலங்கை தொடர்­பான விவாதம் இடம்­பெ­ற­வுள்­ளது.

ஏற்­க­னவே இலங்­கைக்கு வழங்­கிய கால­ அ­வ­காசம் முடி­வ­டையும் நிலையில், இலங்கை அர­சாங்கம் ஜெனீ­வாவில் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை.

இந்­த­நி­லையில், தற்­போ­தைய அர­சாங்கம் காலக்­கெ­டுக்­க­ளுக்கு அமைய செயற்­படத் தயா­ரில்லை என்று கடந்த வியா­ழக்­கி­ழமை, ஐ.நா பாது­காப்புச் சபையில், “அமை­தியைக் கட்­டி­யெ­ழுப்­புதல் மற்றும் நிலை­யான அமைதி:  மோதல்கள் மற்றும் மோதல்­க­ளுக்குப் பிந்­திய நிலை­மை­களில், நிலை­மா­று­கால நீதி” என்ற தலைப்பில் நடந்த திறந்த அமர்வில்,  உரை­யாற்­றிய இலங்கைப் பிர­தி­நிதி சேனுகா செனி­வி­ரத்ன அறி­வித்­தி­ருக்­கிறார்.

எனவே, ஜெனீ­வாவில் இம்­முறை இலங்கை அர­சாங்கம், பொறுப்­புக்­கூறல் கடப்­பா­டு­களை ஏற்றுச் செயற்­படும் என்று கருத இட­மில்லை. இவ்­வா­றான நிலையில், இலங்கை அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அல்­லது இம்­முறை கூட்­டத்­தொடர் விட­யத்தில் கடும்­போக்கு நீடிக்கும் என்ற செய்­தியைக் கொடுக்க முயன்­றி­ருக்­கலாம் அமெ­ரிக்கா.

இலங்­கையில் போர்க்­குற்­றங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் அல்­லது மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு இலக்­கா­ன­வர்கள் என்ற அடிப்­ப­டையில், அமெ­ரிக்­கா­வுக்குள் நுழைய அனு­மதி மறுக்­கப்­பட்­ட­வர்கள் பலர். இரா­ணுவ அதி­கா­ரிகள் மாத்­தி­ர­மன்றி, விடு­தலைப் புலி­களின் முன்னாள் பிர­மு­கர்கள் பலரும் கூட, அவ்­வா­றான தடையில் இருக்­கின்­றனர்.

ஆனாலும், இலங்­கையைச் சேர்ந்த ஒருவர் பற்றி, இவ்­வா­றா­ன­தொரு பகி­ரங்க தடை அறி­விப்பை அமெ­ரிக்கா வெளி­யிட்­டி­ருப்­பது இது தான் முதல் முறை. ஏற்­க­னவே தற்­போ­தைய பாது­காப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்ன, மேஜர் ஜெனரல் சுதந்த ரண­சிங்க, ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய உள்­ளிட்ட பல இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்கு, அமெ­ரிக்கா வீசா வழங்க மறுத்­தி­ருந்­தது. பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கும் கூட அமெ­ரிக்­கா­வுக்கு செல்ல அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

இவர்கள் அனை­வ­ருக்கும் வீசா மறுக்­கப்­பட்­டதே தவிர, அது பற்றி அமெ­ரிக்கா பகி­ரங்­கப்­ப­டுத்­த­வில்லை. தனிப்­பட்ட நபர்­களின் வீசா கோரிக்­கைகள் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தற்கு சட்­டத்தில் இட­மில்லை என்றே அமெ­ரிக்க அதி­கா­ரிகள் கூறி­யி­ருந்­தனர்.

அத்­துடன், மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளான இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்கு மாத்­திரம் வீசா மறுக்­கப்­பட்­டதே தவிர, அவர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கு மறுக்­கப்­ப­ட­வில்லை. ஆனால், லெப்.ஜெனரல் சவேந்­திர சில்­வா­வுக்கு பகி­ரங்­க­மா­கவே தடை அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டி­ருப்­ப­துடன், அவ­ரது நேரடி குடும்ப உறுப்­பி­னர்கள் அமெ­ரிக்­கா­வுக்குள் நுழைய முடி­யாது என்றும் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

இது, இலங்­கையில் போர்க்­குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளா­ன­வர்­களை அணு­கு­கின்ற விட­யத்தில் அமெ­ரிக்கா இன்­னு­மொரு படி முன்னே சென்று முடி­வெ­டுத்­தி­ருக்­கி­றது என்­ப­தையே காட்­டு­கி­றது. அதனால் தான், “பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் நீதிக்­காக பல வரு­டங்கள் போரா­டி­யதன் விளைவால் இடம்­பெற்ற சிறி­ய­தொரு முன்­னேற்­ற­மாக இதை நாம் காண்­கின்றோம்” என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கூறி­யி­ருக்­கி­றது. ஆனால், இது இலங்­கைக்கு எதி­ரான கடு­மை­யா­ன­தொரு நட­வ­டிக்கை அல்ல. இலங்கை அர­சாங்­கத்­துக்கு எதி­ரான முடி­வு­க­ளையும் அமெ­ரிக்கா எடுக்­க­வில்லை. இரா­ணுவத் தள­ப­திக்கு எதி­ராக, அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கு எதி­ரா­கவே அமெ­ரிக்கா முடி­வு­களை எடுத்­தி­ருக்­கி­றது. அதே­வேளை இலங்­கை­யுடன் உற­வுகள், ஒத்­து­ழைப்­புகள் தொட­ரு­வ­தற்­கான சமிக்­ஞை­க­ளையும் காட்­டி­யி­ருக்­கி­றது.

அமெ­ரிக்­காவின் இந்த முடிவை, இலங்கை அர­சாங்கம் கடு­மை­யாக எதிர்த்­தி­ருக்­கி­றது. இது குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள தகவல், ஆதா­ரங்­களை சரி­பார்த்து இந்த முடிவை மீள்­ப­ரி­சீ­லனை செய்ய வேண்டும் என்று கோரி­யி­ருக்­கி­றது.

ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டுகள் என்று வழக்­கம்­போ­லவே தட்­டிக்­க­ழிக்க முனைந்­தி­ருப்­ப­துடன், ஜன­நா­யக ரீதி­யாக தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­திக்கு இரா­ணுவத் தள­ப­தியை நிய­மிக்கும் உரி­மையை வெளி­நாடு ஒன்று கேள்­விக்­குட்­ப­டுத்தும் விட­ய­மா­கவே பார்ப்­ப­தா­கவும் தேசிய பாது­காப்பு விவ­கா­ரங்­களில் மேற்­கொள்­ளப்­படும் குறுக்­கீடு என்றே கரு­து­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றது.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த காலத்திலிருந்தே, புறச் சக்திகளின் தலையீடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் நாட்டின் இறைமை, சுதந்திரம் போன்ற விடயங்களில் யாருக்கும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும் கூறிவந்திருக்கிறது.

அதனையே தான் வெளிவிவகார அமைச்சின் அறிக்கை சற்று வேறுபட்ட மொழிநடையில் வெளிப்படுத்தியிருக்கிறது.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை, ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், இந்த விவகாரத்தை இன்னும் பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது.

சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் விடயத்தில் அமெரிக்கா ஒருபோதும் தடுமாறாது” என்று கூறியுள்ளதானது, நீதியை எதிர்பார்த்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தெம்பைக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது.