பதுளைப் பகுதியின் இராவணாஎல்ல வனப்பகுதியில் இன்று ஏற்பட்ட பாரிய தீயினால் 15 ஏக்கர் வனப்பகுதி பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக எல்ல பொலிசாருக்கு தகவல் எட்டவே, எல்ல பொலிசாரும்  இராணுவத்தினரும் கிராமவாசிகளுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

 

தீயினால் சேதமான வனப்பகுதி நீர் ஊற்றுக்கள், வன விலங்குகள், பெறுமதிமிக்க மரங்கள் இருக்கும் பிரதேசமென எல்ல பொலிசார் தெரிவிக்கின்றனர்.