சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகிவரும் ‘டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இவர் தற்போது சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்கும் ‘டாக்டர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் யோகிபாபு, வினய், அறிமுக நாயகி பிரியங்கா ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த பட நிறுவனமான எஸ்கே புரோடக்சன் தயாரிக்கிறது.

இன்று பிறந்தநாள் காணும் சிவகார்த்திகேயன், தன்னுடைய ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக ‘டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது ரசிகர்களும் இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் மூன்று வேடத்தில் ‘அயலான் ’என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.