குறைந்த செலவில் எடுக்கப்படும் 'மரிஜுவானா' போல தரமான படங்கள் வெற்றியடைய வேண்டும் .இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள்

Published By: Digital Desk 4

17 Feb, 2020 | 03:14 PM
image

குறைந்த செலவில் எடுக்கப்படும் மரிஜுவானா போன்ற தரமான படங்கள் வெற்றியடையவேண்டும் என்று இயக்குநர் மிஷ்கின் ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். 

3rd Eye கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் 'அட்டு' படப் புகழ் நடிகர் ரிஷி ரித்விக், அறிமுக நடிகை ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள மரிஜுவானா படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையிலுள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.. இவ்விழாவில் இயக்குநர்கள் கே பாக்யராஜ், ஆர் கே செல்வமணி,  மிஷ்கின், தயாரிப்பாளர் கே ராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றினர். இவர்களுடன் படத்தில் பணியாற்றிய குழுவினரும் பங்குபற்றினர். 

தயாரிப்பாளர் எம்.டி.விஜய் பேசும்போது,“'மரிஜுவானா' என்ற இந்த படத்தின் பெயரைக் கூறியதும் அப்படி என்றால் என்ன? என்று கேட்டார்கள். இது கஞ்சா என்பதன் அறிவியல் பெயர் என்று விளக்கம் கொடுத்தேன். கஞ்சா போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்துவதால் பாடசாலையில் பயிலும் இளைஞர்கள் எந்தளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறோம். இப்படத்தின் கதையை பல முன்னணி நாயகர்களிடம் கூறினோம். ஆனால், ரிஷி மட்டும் தான் ஒப்புக்கொண்டார்.” என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில்,“ ஆர்.கே.செல்வமணியும் பாக்யராஜும் எனக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருந்தவர்கள். அதேபோல், நீங்கள் தான் எனக்கு தூண்டுதலாக இருக்கிறீர்கள் என்று இப்படத்தின் இயக்குநர் எம்.டி.ஆனந்த் கூறினார். ஆகையால் தான் இந்த விழாவிற்கு வர சம்மதம் தெரிவித்தேன். இந்த விழாவைப் பார்க்கும் போது வெற்றி விழாவாகத் தோன்றுகிறது. மேலும், இது போன்ற நல்ல கருத்தை கூறும் குறைந்த  பொருட்செலவில் எடுக்கும் படங்கள் வெற்றிபெற வேண்டும்.”  என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,“ இந்த படத்தின் பெயருக்கு அர்த்தம் கேட்ட போது, கஞ்சா என்று கூறினார்கள். 45 வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து நானும் கஞ்சா அடித்திருக்கிறேன். ஒரு முறை போதையில் என் நண்பன் தன்னிலையறியாமல் இருப்பதைப் பார்த்தேன். இப்படி இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது என்று அன்று முதல் கஞ்சா அடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டேன். இப்படம் கஞ்சா உபயோகிப்பதன் பாதிப்பை கூறுவதால் இளைஞர்களுக்கு விழிப்புணர்வாக அமையும்.” என்றார்.

இயக்குநர் எம்.டி.ஆனந்த் பேசுகையில்,“இது எனக்கு முதல் மேடை. அதுவும் பெரிய மேடை.  அதிக அளவு போதை ஒரு மனிதனின் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதை தான் இப்படத்தில் கூறியிருக்கிறேன். மேலும், தணிக்கைக் குழுவினர் 'ஏ' சான்றிதழ் குடுத்திருக்கிறார்கள். ஆனால், இது விழிப்புணர்வு படம் மட்டுமே. கார்த்திக் குரு இசையில் அனைத்து பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது. 'அட்டு' படத்தைப் பார்த்து இது மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று என் தம்பியிடம் கூறினேன். ஆனால், 'அட்டு' நாயகன் ரிஷி ரித்விக்கை வைத்து படம் இயக்கியத்தில் மகிழ்ச்சி. நாயகி ஆஷா எல்லா விதமான காட்சிகளிலும் தைரியமாக நடிக்க கூடியவர்.” என்றார்.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது,“என்னை இந்த விழாவிற்கு அழைத்தபோது இவ்வளவு பெரிய அரங்கத்தில் குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு என்ன கூட்டம் வந்து விட போகிறது என்று நினைத்தேன். ஆனால் அரங்கம் நிறைந்துவிட்டது. திரைப்படம் மூலம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்த இந்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் 'மரிஜுவானா' படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஆண்ட' டைட்டில் லுக்...

2026-07-14 16:40:34
news-image

கல்லூரி மாணவர்களின் ரீயூனியன் கதையை இயக்கும்...

2026-07-14 15:59:48
news-image

ஞானபீட விருதை பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து

2026-07-14 15:58:27
news-image

டொக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'வெல்கம்...

2026-07-14 15:37:24
news-image

நடிகர் பகத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-07-13 17:15:25
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-07-13 16:38:42
news-image

ஆங்கிலோ- இந்திய சமூக மக்களின் வாழ்வியலை...

2026-07-13 16:35:45
news-image

திரு வீர்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து...

2026-07-13 16:33:09
news-image

இசை குயில் 'எஸ். ஜானகிக்கு இந்தியத்...

2026-07-12 14:14:16
news-image

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி...

2026-07-11 21:42:07