இந்தியாவின் உசைன்போல்ட் என வர்ணிக்கப்படும் கர்நாடகாவின் எருதுகளுடன் ஓடும்  ஓட்டப்பந்தய  வீரர்சிறீனிவாஸ் கௌடா,  தேசிய போட்டிகளில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை நிராகரித்துள்ளார்.

கம்பாலா என அழைக்கப்படும்  வயலிற்கு நடுவில் இரண்டு எருதுகளுடன் 142 மீற்றர் ஒடும்போட்டியில் சிறீனிவாஸ் கௌடா கலந்துகொண்டு சாதனை நிகழ்த்தியிருந்தார்.

28 வயது கௌடா துடிப்பாக செயற்பட்டு முதல் 100 மீற்றரை 9.55 வினாடியில் கடந்தார்.

மொத்த தூரத்தை இவர் 13.62 வினாடிகளில் கடந்தார்

இதேவேளை இவர் உசைன் போல்டின் உலக சாதனையையும் முறியடித்தார் இதன் காரணமாகஇவரை இந்திய ஊடகங்கள்இந்திய உசைன் போல்ட்என கொண்டாடுகின்றன.

கௌடாவின் வெற்றி சமூக ஊடகங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் பரவி இந்தியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தேசிய போட்டிகளில் கலந்துகொள்ளுமாறு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கௌடாவிற்கு புகையிரதம் மூலம் புதுடில்லி சென்று அங்குள்;ள இந்திய விளையாட்டு துறை அதிகாரசபையில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த பயிற்றுவிப்பாளர்கள் அவரிற்கு பயிற்சிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் தன்னால் தேசிய போட்டிகளில் கலந்துகொள்ளமுடியாது எனது காலில் காயம் ஏற்பட்டுள்ளது நான் கம்பலாவில் மாத்திரம் அக்கறை செலுத்துகின்றேன் என கௌடா  குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு  வயல்வெளிகளில்  எருதுகளுடன்  ஒடுவதே பழக்கமான விடயம்   என அவர் தெரிவித்துள்ளார்.