பேஸ்புக் சமூக வலைத்­த­ளத்தை பல்­வேறு மட்­டங்­களை சேர்ந்­த­வர்­களும் இன்று பயன்­ப­டுத்தி வரு­கின்ற நிலையில், அதில் பய­னா­ளர்­க­ளுக்கு நன்மை பயப்­ப­தற்­காக புதி­தாக சேர்க்­கப்­பட்­டுள்ள விடயங்­களை அறிந்­துள்­ளோமா என்று கேட்டால் பலரும் இல்­லை­யென்றே பதி­ல­ளிக்­கின்­றனர்.

உலகின் மொத்த சனத்­தொகை 780 கோடி­க­ளாக காணப்­ப­டு­கின்­ற­ நி­லையில்,  பயன்­படுத்­து­ப­வர்­களின் எண்­ணிக்கை 250 கோடி­களைத் தாண்டி அதி­க­ரித்து­ வ­ரு­கின்­றது. அதன்படி உலகில் மூன்­றி­லொ­ருவர் பேஸ்புக்கை பயன்­ப­டுத்­து­கின்­றனர் என எடு­கோ­ளாகக் கொள்­ள­மு­டியும்.

பேஸ்­புக்கை ஒரு நாடாக கணித்தால், அதனைப் பயன்­ப­டுத்­து­ப­வர்­களின் எண்­ணிக்கை உலகின் எந்த­வொரு நாட்டின் மக்­கள் ­தொ­கையை விடவும் அதி­க­மென்­பதும் இலங்­கையில் 7 மில்­லியன் பேஸ்புக் பய­னா­ளர்கள் இருப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. சுமார் 250 கோடிப்பேர் உலா­வு­கின்ற ஓர் இடம் பேஸ்புக். அதே நேரம்  பல கோடிக்­க­ணக்­கான  போலிப் பய­னா­ளர்கள் சுற்­றித்­ தி­ரிகின்ற ஓர் இடமும் பேஸ்­புக்தான். புது நண்­பர்கள், கருத்து மற்றும் ரசனை பரி­மாற்­றங்கள், ஆரோக்­கி­ய­மான விவா­தங்கள் என ஏரா­ள­மான நன்­மைகள் இருந்­தாலும் பேஸ்­புக்கில் ஆபத்­து­களும் இருக்­கின்­றன.

அதனால் உட­ன­டி­யாக கீழ்­வரும் விடயங்­களை பேஸ்­புக்கில் இருந்து நீக்­குங்கள் என்று தொழில்­நுட்ப வல்­லு­நர்கள் எச்­ச­ரிக்கை செய்­தி­ருக்­கின்­றனர்.

உறவு நிலை -

பேஸ்புக் மாதி­ரி­யான சமூக வலைத்­த­ளத்தில் 'நான் கல்­யா­ண­மா­னவர், காதலில் இருப்­பவர், பிரிந்து இருப்­பவர்' போன்ற உங்­களின் உறவு ரக­சி­யங்­களை வெளிப்­ப­டை­யாக தெரி­விப்­பது அவ்­வ­ளவு அவ­சி­ய­மா­னதல்ல. தவிர, உங்­களின் டேட்டிங் வாழ்க்­கையை அங்கே பதி­வி­டு­வதும் நல்­ல­தல்ல. இதனால் உங்­களின் தனிப்­பட்ட வாழ்க்­கைக்கு பிரச்சி­னைகள் வர வாய்ப்­பி­ருக்­கின்றன.

குழந்­தை­களின் புகைப்­ப­டங்கள்

உங்­களின் குழந்­தைகள் மற்றும் நண்­பர்கள், உற­வினர், தெரிந்­த­வர்­களின் குழந்­தைகள் என எந்தக் குழந்­தையின் புகைப்­ப­டத்­தையும் பேஸ்­புக்கில் பகிர வேண்டாம். இது குழந்­தை­களைக் கடத்­து­ப­வர்­க­ளுக்கு சாத­க­மா­கி­விடும்.

குழந்தை படிக்கும் பாட­சாலை

நிறைய பெற்­றோர்கள் பெரு­மைக்காக தங்­களின் குழந்­தைகள் படிக்கும் பாட­சாலை, அவர்­களின் தனித்­தி­ற­மை­களை புகைப்­படம் மற்றும் வீடி­யோ­வாக்கி லைக்­கு­க­ளுக்­காக பதி­வி­டு­கின்­றனர். இது குழந்தை கடத்­து­ப­வர்­க­ளுக்கு நீங்­களே வழி­காட்­டு­வதைப் போல அமையும்.

குடிக்கும் புகைப்­ப­டங்கள்

உங்­களின் குடும்ப உறுப்­பி­னர்கள், நண்­பர்கள், வேலை செய்யும் நிறு­வ­னத்­தினர் என எல்­லோரும் இருக்கும் இடம் இது. அங்கே மது­போத்­தல்­க­ளு­டனோ  அல்­லது ஏதா­வது கொண்­டாட்ட களி­யாட்­டங்­களில் இருப்­பது மாதி­ரியோ பலரும் புகைப்­ப­டங்­களை பகிர்­கின்­றனர். ஜாலிக்­காக இதைப் பகிர்ந்­தாலும் இந்தப் புகைப்­ப­டங்கள் உங்கள் மீதான மரி­யா­தையை சீர்­குலைக்கும்.

தெரியாத­வரை இணைக்க வேண்டாம்.

நீங்கள் கொஞ்சம் பிர­ப­ல­மா­கும்­போது நிறைய நண்பர் வேண்­டுகோள் வரும். அதில் தெரி­யாத நபர்­க­ளையும் இணைத்­துக்­கொள்வோம். இதை முடிந்­த­ளவு தவிர்க்கப் பாருங்கள்.

 கார்ட் தக­வல்கள்

பேஸ்­புக்கில் நிறைய விளம்­ப­ரங்கள் வரும். அவற்றில் பிடித்­ததைக் கிளிக் செய்து ஷொப்பிங் செய்­வது பலரின் வழக்கம்.

அப்­படி ஷொப்பிங்  செய்­யும்­போது கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்­களின் தக­வல்கள் பதி­வாக வாய்ப்­பி­ருக்­கின்றன. அதனால் ஷொப்பிங் முடிந்­த­வுடன்  கார்ட்­களின் தக­வல்­களை உட­ன­டி­யாக நீக்­கி­வி­டுங்கள்.

தொலை­பேசி இலக்கம்

நீங்கள் தெருவில் நடந்து செல்­கி­றீர்கள். எதிரே வருவோர் போவோர் எல்­லோ­ரி­டமும் உங்­களின் தொலை­பேசி இலக்­கத்தை  தரு­வதைப் போன்­ற­துதான் பேஸ்­புக்கில்  நம்­பரைப் பகிர்­வது. இன்று தொலை­பேசி இலக்­கத்தை வைத்தே உங்­களின் அனைத்து தக­வல்­க­ளையும் திருட முடியும். உஷா­ராக இருங்கள்.

Tagகை தவி­ருங்கள்

நண்­பர்கள் அல்­லது உற­வி­னர்கள் உங்­களை Tag செய்­யலாம். Tag செய்­யப்­பட்­டி­ருக்கும் பதிவு முக்­கி­ய­மாக இருந்­தாலும் அதைப் பார்த்­து­விட்டு Tagகை நீக்­கி­வி­டுங்கள். இல்­லை­யென்றால் அந்த Tag மூலம் அந்­நியர் ஒருவர் உங்­களைத் தொடர்பு கொள்ள வாய்ப்­பி­ருக்­கி­றது.

பிறந்த நாள்

பெரும்­பா­லா­ன­வர்கள் தங்­களின் பிறந்தநாளை குறிப்­பிட்­டி­ருப்­பார்கள். பிறந்த நாளன்று முக­ம­றி­யாத பலரின் வாழ்த்­துகள் உங்­களை மகிழ்ச்­சிப்­ப­டுத்­தலாம். ஆனால், பிறந்த நாளை வைத்தே உங்­களைப் பற்­றிய தக­வல்­களைத் திரட்­டு­வ­தற்கு தொழில்­நுட்பம் வந்­து­விட்டது. பிறந்த நாளைக் குறிப்­பி­டு­வதைத் தவிர்ப்­பதே நல்­லது. இது­போக நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்­றிய தக­வல்­க­ளையும் தவி­ருங்கள். உதார­ணத்­துக்கு இந்த தியேட்­டரில் இந்தப் படம் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கிறேன். அடுத்து நீங்கள் பயணம் போகும் இடங்­களைப் பற்­றிய தக­வல்கள், அங்கே எடுக்கும் புகைப்­ப­டங்கள், பய­ணத்­துக்­கான திட்­டங்­கள் போன்றவற்றை பேஸ்­புக்கில் வெளிப்­ப­டுத்­தா­தீர்கள். அது உங்­களின் வீடு காலி­யாக இருக்­கி­றது, வீட்டில் யாருமே இல்லை என்­பதை மறை­மு­க­மாக தெரி­விக்­கிறது.              

Privacy Checkup tool  

எமது தனிப்­பட்ட தக­வல்கள் திரு­டப்­படும் ஆபத்­துகள் பல உள்­ளன. இதனை உணர்ந்து பேஸ்புக் நிறு­வனம் அதன் Privacy Checkup tool-ஐ அப்டேட் செய்­துள்­ளது.

பேஸ்புக் பய­னர்­களின் கணக்கு பாது­காப்பை மேம்­ப­டுத்தும் நான்கு புதிய security அம்­சங்கள் சேர்க்­கப்­பட்­டுள்ளன. ஆக, இனிமேல் யாராலும் உங்­களின் கணக்கை  அவ்­வ­ளவு எளி­தாக ஹேக் செய்­யவோ அல்­லது உங்­களை பற்றிய தக­வல்­களை சேக­ரிக்­கவோ முடி­யாது என்று எதிர்­பார்க்­கலாம்.

இந்த புதிய அம்­சங்களானது, பய­னர்­களின் பேஸ்புக் கணக்­கு­களின் பாது­காப்பை மேம்­ப­டுத்­த­வும் அவர்­களின் தக­வல்கள் எவ்­வாறு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்­பதைக் கட்­டுப்­ப­டுத்­தவும் உதவும் என்று பேஸ்புக் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

Privacy Checkup tool- ஆனது கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பேஸ்புக்கில் உள்­ளன. மேலும் புதிய அம்­சங்களும் அதில் இணைத்­துக் ­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இந்த புதிய அம்­சங்­களின் பெயர் என்ன, அதன் வழி­யாக நமக்கு கிடைக்கும் நன்­மைகள் என்ன? என்­பதை பற்றி விரி­வாக அறிய தொடர்ந்து படிக்­கவும்.

முத­லா­வ­தாக 'Who Can See What You Share' அம்சம்: இது பய­னர்­களின் தொலை­பேசி எண், மின்னஞ்சல் முக­வரி மற்றும் அவர்­களின் போஸ்ட்கள் போன்ற ப்ரொபைல் தக­வல்­களை யார் எல்லாம் காணலாம் என்­பதை மதிப்­பாய்வு செய்ய உதவும் ஒரு அம்சமாகும்.

இரண்­டா­வ­தாக 'How to Keep Your Account Secure' அம்சம்: வலு­வான கட­வுச்­சொல்லை அமைத்து உங்கள் பேஸ்புக் அக்­கவுண்ட் பாது­காப்பை வலுப்­ப­டுத்­தவும் login அலெர்ட்­களை எனேபிள் செய்து வைக்­கவும் இந்த அம்சம் உதவும்' என்று  ஒரு வலைப்­ப­திவு வழி­யாக பேஸ்புக் தெரி­வித்­துள்­ளது. மூன்­றா­வ­தாக 'How People Can Find You' அம்சம்: மக்கள் உங்­களை எப்­ப­டி­யெல்லாம் பேஸ்புக் வழி­யாக கண்­ட­றி­யலாம் மற்றும் உங்­க­ளுக்கு யாரெல்லாம் பிரெண்ட் ரிக்வஸ்ட்டை அனுப்­பலாம் என்­பதை மறு­ ப­ரிசீலனை செய்ய உதவும்.

 கடை­சி­யாக 'Your Data Settings' அம்சம்: இது பேஸ்புக் வழி­யாக நீங்கள் லொகின்  செய்ய App­க­ளுடன் நீங்கள் பகிரும் தக­வல்­களை மதிப்­பாய்வு செய்ய அனு­ம­திக்கும். இதன் வழி­யாக நீங்கள் பயன்­ப­டுத்­தாத App­க­ளையும் அகற்­றலாம் என்று பேஸ்புக் கூறி­யுள்­ளது. பேஸ்­புக்கின் டெஸ்க்டாப் தளத்தில் உள்ள கேள்­விக்­குறி icon ஐகனைக் கிளிக் செய்து நீங்கள் உங்களின் ப்ரைவஸி செக் டூலை அணுகலாம். 'தனியுரிமை என்பது மிகவும் தனிப்பட்டது என்று தெரியும். உங்களுக்காக சரியான தனியுரிமை முடிவுகளை நீங்கள் எடுக்க உங்களுக்கு உதவ தனியுரிமை உதவிக் குறிப்புகளை ஒருங்கிணைத்துள்ளோம்' என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் போன்ற ஒரு செயலியை நாம் இலவசமாக பயன்படுத்தும் போது அவர்கள் எமது தகவல்களை விளம்பரதாரர்களுக்கு விற்பதன் மூலமே சம்பாதிக்கின்றனர் என்பதை நினைவில் நிறுத்தவேண்டும். அதனால் இவ்வாறான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அடிக்கடி செய்து எமது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

- அருண் ஆரோக்கியநாதர்