சீனாவில் புதிய கொவிட் –19 கொரோனா வைரஸ் தொற்றால் புதி­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தொகையில் தொடர்ந்து மூன்­றா­வது நாளாக வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. நாட­ளா­விய ரீதியில் புதி­தாக 2,009 பேரு க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அந்த வைரஸ் தொற்றால் புதி­தாக 142 பேர் மர­ண­ம­டைந்­துள்­ள­தா­கவும் சீன அதி­கா­ரிகள் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தனர்.

கடந்த வாரத்தில் மேற்­படி வைரஸ் தொற் றால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் உயி­ரி­ழந்­த­வர்கள் தொகையில் ஆரம்­பத்தில் வீழ்ச்­சி­யொன்று அவ­தா­னிக்­கப்­பட்டபோதும் பின்னர் அத்­தொ­கை­களில் சடு­தி­யாக அதி­க­ரிப்பு ஏற்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில்  கொரோனா வைரஸ் தொற்றில் புதி­தாக தொடர்ந்து 3 நாட்­க­ளாக வீழ்ச்சி அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளமை அந்த வைரஸ் பர­வு­வதை கட்­டுப்­ப­டுத்­த­வது தொடர்பில் அனு­கூ­ல­மான பெறு­பேறு ஒன்­றாக கரு­தப்­ப­டு­கி­றது.

சீனாவில் இது­வரை மொத்தம் 68,000 பேர் கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். அதே­ச­மயம் இந்த வைரஸ் தொற்றால் சீனாவில் மட்டும் 1,666 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்­நி­லையில் சீனா­விற்கு வெளியில் சுமார் 30 நாடு­களில் 500 பேருக்கும் அதி­க­மா­னோ­ருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அத்­துடன் பிரான்ஸ்,  ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடு­களில் தலா ஒருவர் வீதம் நான்கு பேர் இந்த வைரஸ் தொற்றால் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றில் ஏற்­பட்­டுள்ள பிந்­திய வீழ்ச்­சி­யை­ய­டுத்து சீன வெளிநாட்டு அமைச்சர் வாங் யி தெரி­விக்­கையில்,  இந்த வைரஸ் தொற்று தொடர்­பான  தற்­போ­தைய  பெறு­பே­றா­னது மேற்படி தொற்­றுநோய் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளதை வெளிப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது எனத் தெரி­வித்தார். தாம் எந்­த­வொரு நாடும் எடுக்­காத வகையில்  முழு­மை­யான நோய் தடுப்பு மற்றும் கட்­டுப்­பாட்டு முயற்­சி­களை பரந்­த­ளவில் முன்­னெ­டுத்­துள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.

வங்கி நாணயத்­தாள்­க­ளுக்கு தொற்று நீக்கும் நட­வ­டிக்கை
சீனாவின் மத்­திய வங்­கி­யா­னது வைரஸ் பர­வு­வதை தடுக்க  பயன்­ப­டுத்­தப்­பட்ட வங்கி நாண­யத்­தாள்கள் மீள்சுழற்­சிக்கு விடப்­ப­டு­வ­தற்கு முன்னர் அவற்றை சேக­ரித்து  தொற்று நீக்கி குறிப்­பிட்ட நாட்­க­ளுக்கு களஞ்­சியப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. இதன்­பி­ர­காரம் யுவான் நாணயத் தாள்கள் புற ஊதா கதிர்­களை அல்­லது உயர்­வெப்­பத்தைப் பயன்­ப­டுத்தி தொற்று நீக்­கிய பின்னர் அந்த நாண­யத்­தாள்கள் குறிப்­பிட்ட பிராந்­தி­யத்தில் நோய் பரவும் தீவி­ரத்தைப் பொறுத்து 7 நாட்கள் முதல் 14 நாட்கள்வரை களஞ்­சி­யப்­ப­டுத்தி வைக்­கப்­ப­ட­வுள்­ளன.

ஆசி­யா­வுக்கு வெளியில் முதல் தட­வை­யாக மரணம்
பிரான்ஸில் புதிய கொரோனோ வைரஸ் தொற்­றுக்­குள்­ளான சீன சுற்­றுலாப் பய­ணி­யொ­ருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பிரான்ஸ் அதி­கா­ரிகள் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை தெரி­வித்­தனர். இது  கொரோனா வைரஸ் தொற் றால் ஆசி­யா­வுக்கு வெளியில் இடம்பெற்ற முத­லா­வது மர­ண­மாக கரு­தப்­ப­டு­கி­றது.

மேற்­படி 80 வயது  சீன சுற்­று­லாப்­ப­யணி  கடந்த  ஜன­வரி மாதம் 16ஆம் திகதி சீன ஹுபி மாகா­ணத்­தி­லி­ருந்து  பிரா­ன்­ஸுக்கு பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார். தொடர்ந்து சுக­வீ­ன­முற்ற அவ­ருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­ட­தை­ய­டுத்து அவர் பாரிஸ் நக­ரி­லுள்ள பிசட் மருத்­து­வ­ம­னையில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலை­யி­லேயே உயி­ரி­ழந்­துள்ளார். அவ­ரது மக­ளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்­பட்­டுள்ளபோதும் அவர் குண­ம­டைந்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஜப்­பா­னிய கப்­பலில் சிக்­கி­யுள்ள வெளிநாட்­ட­வர்­களை வெளியேற்ற நட­வ­டிக்கை
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் கார­ண­மாக ஜப்­பா­னிய கடற்­க­ரைக்கு அப்பால் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள டயமண்ட் பிரின்சஸ்  சொகுசு கப்­பலில் சிக்­கி­யுள்ள சுமார் 400 அமெ­ரிக்­கர்­களை தாய்­நாட்­டுக்கு அழைத்து வரு­வ­தற்­காக  அமெ­ரிக்கா விமா­ன­மொன்றை அனுப்பி வைத்­துள்­ளது.

அதே­ச­மயம் ஹொங்­கொங்கும் அந்தக் கப்­பலில் சிக்­கி­யுள்ள தனது சுமார் 33 பிர­ஜை­களை வெளியேற்ற விமா­ன­மொன்றை அனுப்ப நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. மேற்­படி கப்­பலை தனி­மைப்­ப­டுத்தும் நட­வ­டிக்கை நாளை மறு­தினம் புதன்­கி­ழ­மை­யுடன் முடி­வுக்கு கொண்டு வரப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கம்போ­டியா கடற்­க­ரைக்கு அப்பால் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட கப்பல்
மேலும் எம்.எஸ். வெஸ்­டர்டாம் கப்­பலில் பய­ணித்த 83 வயது அமெ­ரிக்கப் பெண்ணொ ­ரு­வ­ருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­ட­தை­ய­டுத்து அந்தக் கப்பல்  கம்போ­டிய கடற்­க­ரைக்கு அப்பால் தனி­மைப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளது. கம்­போ­டி­யாவில் இறங்­கிய அந்தப் பெண் விமா­னத்தின் மூலம் மலே­சி­யாவை வந்­த­டைந்த நிலையில் அ­வ­ருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் குறிப்­பிட்ட கப்­பலில் பய­ணித்த ஏனைய பய­ணி­க­ளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்­பட்­டி­ருக்கும் சாத்­தி­ய­முள்­ள­தாக அஞ்­சப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் அந்தக் கப்­பலை தனி­மைப்­ப­டுத்தி அதி­லுள்ள ஏனைய பய­ணி­களை மருத்­துவ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்தும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. பிரித்­தா­னி­யாவில் கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளான 9 பேரில் ஒருவர் மருத்­துவ சிகிச்­சையின் பின்னர் மருத்­து­வ­ம­னையை விட்டு வெளியே­றி­யுள்ளார்.

சிங்­கப்­பூரில் புதி­தாக ஐவ­ருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் அந்­நாட்டில் கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­ன­வர் கள் தொகை  72 ஆக உயர்ந்­துள்­ளது. 18 பேர் சிகிச்­சைக்குப் பின்னர் பூரண குண­ம­டைந்து மருத்­து­வ­ம­னையைவிட்டு வெளியேறி­யுள் ளனர். இந்­நி­லையில் இந்த வைரஸ் தொற் றைக் கட்­டுப்­ப­டுத்த சீனா மேற்­கொண்ட நட­வ­டிக்கை குறித்து உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் தலைவர் ரெட்ரொஸ் அதானொம் கப்­பி­றி­யெஸஸ் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை பாராட்­டு­களைத் தெரி­வித்­துள்ளார்.

மில்­லி­யன்­க­ணக்­கானோர் தொடர்ந்து தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில்
 உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கொவிட் – 19 என பெயர் சூட்­டப்­பட்­டுள்ள இந்தக் கொரோனா  வைரஸ் பர­வு­வதைக் கட்­டுப்­ப­டுத்­த­ுவ­தற்­கான சீன அர­சாங்­கத்தின் முயற்­சி­களின் அங்­க­மாக  சீனாவில் மில்­லி­யன்­க­ணக்­கான மக்கள் தொடர்ந்து தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட நிலையிலுள்­ளனர். அவர்கள் நாளாந்த கட­மை­களை மேற்­கொள்­வதில் கடும் கட்­டுப்­பா­டு­களை எதிர்­கொண்­டுள்­ளனர். அதி­க­ள­வான கடும் கட்­டுப்­பா­டு­களை  மேற்­படி வைரஸ் தொற்றின் தோற்­றுவாய் பிராந்­தி­ய­மான ஹுபி மாகாணம் மற்றும் அதன் தலை­நகர் வுஹா­னி­லுள்ள மக்கள் எதிர்­கொண்­டுள்­ளனர். வுஹான் நக­ரா­னது சீனா­வி­லுள்ள ஏனைய பிராந்­தி­யங்கள் அனைத்­தி­லு­மி­ருந்து துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

ஹுபி மாகா­ணத்தில் கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­களின்  தொகையில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ள­துடன்  அந்த மாகா­ணத்­திற்கு வெளியே தொற்­றுக்­குள்­ளா­ன­வர்கள் தொகை தொடர்ந்து 11ஆவது நாளாக வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக வெளிநாட்டு அமைச்சர் வாங் யி தெரி­வித்தார். இந்த வைரஸ் தொற்­றுக்கு சிகிச்சை பெற்று குண­ம­டைந்­த­வர்கள் தொகை­யிலும் கணி­ச­மான அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக  அவர் கூறினார்.

இந்­நி­லையில் சீன பீஜிங் நக­ரா­னது தனது நக­ருக்கு திரும்பும் ஒவ்­வொ­ரு­வரும் 14 நாட்­க­ளுக்கு தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் வாழ வேண்டும் எனவும் மீறு­ப­வர்கள்  தண்­ட­னையை எதிர்­கொள்ள நேரிடும் எனவும் எச்­ச­ரித்­துள்­ளது.